வெள்ளையராக நடித்துப் பெண்களை ஏமாற்றிய ஆடவர்

வெள்ளையராக நடித்துப் பெண்களை ஏமாற்றிய ஆடவர்

1 mins read
25439693-5b09-44eb-a0f8-28214b517c61
-

ஆடவர் ஒருவர், டிண்டர் இணையத்தளத்தில் ஜேக் என்ற வெள்ளையராக நடித்து பெண்களை ஏமாற்றி அவர்கள் நிர்வாணமாக இருக்கும் படங்களைப் பெற்றிருக்கிறார். தனக்குப் பாலியல் சேவைகளை வழங்காவிட்டால் அந்தப் படங்களை வெளியிடப்போவதாகவும் ஓங் சுன் சியாங் என்ற அவர் சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டியிருக்கிறார்.

பயந்துபோனபோதும் அந்தப் பெண்கள் அவரின் நிபந்தனையை நிறைவேற்றவில்லை எனத் துணை அரசாங்க வழக்கறிஞர் ஷென் வான்சின் தெரிவித்தார். அதற்குப் பதிலாக அவர்கள் போலிசாருக்குத் தகவல் கொடுத்து ஆடவருடன் தொடர்புகொள்வதை நிறுத்திக்கொண்டனர்.

25 வயது சிங்கப்பூரரான ஓங், மிரட்டியது, தொந்தரவு செய்தது ஆகியவற்றின் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தண்டனை வழங்கும்போது மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்படும்.