தொற்று பல்கிப் பெருகுவதை தவிர்க்க அமைச்சர் கோரிக்கை

சிங்­கப்­பூ­ரில் ஆகஸ்ட் 23க்கு பிறகு தொற்று பெருகி உள்­ளது.

அது மேலும் மூன்று மடங்கு கூடி பிறகு குறைந்து, நிலைப்­படும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைச்­சர் ஓங் யி காங் தெரி வித்தார்.

மடங்கு மடங்­கா­கப் பெருகி தொற்று எண்­ணிக்கை 3,200க்குக் கூடு­வ­தைத் தவிர்த்­துக்­கொள்ள மக்­கள் செயல்­பட வேண்­டிய தேவை இருக்­கிறது என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு ஓங், நேற்று மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் மாநாட்­டில் பேசி­னார்.

அதிக தடுப்­பூசி போட்டுள்ள நாடு­க­ளின் அனு­ப­வத்­தைப் பார்க்­கை­யில், தொற்று பொது­வாக 30 முதல் 40 நாட்­களில் உச்­சத்தை எட்­டு­கிறது. அதன் பிறகு அது குறை­யத் தொடங்­கு­கிறது என்­பது தெரி­கிறது.

அந்­தக் கால­கட்­டத்­தில் ஒவ்வொரு 10 நாட்­க­ளுக்­கும் ஒரு முறை தொற்று இரண்டு மடங்­கா­கக் கூட வாய்ப்பு இருக்­கிறது.

இதை வைத்துப் பார்க்­கை­யில் சிங்­கப்­பூர் நான்கு அல்­லது ஐந்து மடங்கு தொற்­றுப் பெருக்­கத்­தைச் சமா­ளிக்க ஆயத்­த­மாக இருக்க வேண்­டும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

இப்­போது 400லிருந்து 800 ஆக நாள் ஒன்­றுக்கு இரண்டு மடங்­கா­கும் நிலை இருக்­கிறது.

இதற்­குப் பிற­கும் இரு முறை மடங்­கு மடங்காகத் தொற்­று கூடும் என்று வைத்­துக்கொண்­டால், அன்­றாட தொற்று எண்­ணிக்கை 800லிருந்து 1,600 ஆக, 1,600லிருந்து 3,200 ஆக உய­ரக்­கூ­டும். அதற்­குப் பிறகு அது குறை­யக்­கூ­டும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இப்­படி நிக­ழுமா, நிக­ழாதா என்­பது நம் ஒவ்­வொ­ரு­வ­ரின் ஒட்டு­மொத்த செயல்­பாட்­டையும் பொறுத்தே இருக்­கும் என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!