செப்டம்பர் 14 முதல் ‘பூஸ்டர்’ தடுப்பூசிக்கு முதியவர்கள் பதியலாம்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான பூஸ்­டர் தடுப்­பூசி செயல்­திட்­டம் இம்­மா­தம் 14ஆம் தேதி தொடங்­கு­கிறது.

அந்­தச் செயல்­திட்­டம் 60 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள முதி­ய­வர்­க­ளுக்கு உரி­யதாக இருக்கும்.

முதி­ய­வர்­க­ளுக்­கான பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளை­யும் அந்­தத் திட்­டம் உள்­ள­டக்­கும் என்று நேற்று சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

புற்­று­நோய் முத­லான நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்டு சிகிச்­சை பெற்று வரு­வோருக்கு உட­லில் நோய் எதிர்ப்­பாற்­றல் குறைவாக இருக்கலாம். அல்லது அறவே இல்லாமல் போகலாம். இத்தகையோரும் அந்­தச் செயல்­திட்­டத்­தில் சேர்த்துக் கொள்ளப்­ப­டு­வார்­கள் என்று அமைச்சு மேலும் கூறி­யது.

குறைந்­த­பட்­சம் ஆறு மாதங்­க­ளுக்கு முன் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்டுக் கொண்­டி­ருக்­கும் முதி­ய­வர்­கள், பூஸ்­டர் ஊசி­யைப் போட்­டுக்­கொள்ள அழைக்­கப்­படு­வார்­கள்.

அவர்­க­ளின் கைபேசி எண்­ணுக்கு குறுஞ்­செய்தி அனுப்­பப்­படும் என்று அறிக்கை ஒன்­றில் அமைச்சு குறிப்­பிட்­டது.

அவர்­கள் www.vaccine.gov.sg. என்ற இணை­யத்­த­ளம் மூலம் புதி­தாக முன்­ப­திவு செய்துகொள்­ள­லாம்.

குறுஞ்­செய்தி வரும்­போது பூஸ்­டர் தடுப்­பூ­சிக்­குப் பதிந்­து­கொள்­ளும்­படி தகுதி உள்ள முதி­ய­வர்­களை நேற்று நடந்த கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு மெய்­நிகர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் வலி­யு­றுத்­திக் கேட்டுக்கொண்டார்.

இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­தற்கு ஆறு முதல் ஒன்­பது மாதங்­கள் கழித்து பூஸ்­டர் தடுப்­பூ­சியை முதி­ய­வர்­கள் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று அண்­மை­யில் கொவிட்-19 தடுப்­பூசி வல்லு­நர்­கள் குழு பரிந்­து­ரைத்து இருந்­தது.

பூஸ்­டர் தடுப்­பூசி ஒரு­வ­ரின் உட­லில் நோய் எதிர்ப்பு ஆற்­ற­லைப் பெருக்­கும்.

கடு­மை­யான நோயி­லி­ருந்து அதிக பாது­காப்பை நீண்ட நெடுங்­கா­லத்­திற்கு அது கொடுக்­கும் என்று அந்­தக் குழு தெரி­வித்­தது.

நோய் தடுப்­பாற்­றல் போதிய அள­வுக்கு இல்­லா­த­வர்­கள் கொவிட்-19 இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தற்­குப் பிறகு இரண்டு மாதம் கழித்து மூன்­றாவது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளும்­படி ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தாக அமைச்சு நேற்று குறிப்­பிட்­டது.

இருந்­தா­லும் அவர்­கள் தங்­க­ளுக்­குச் சிகிச்சை வழங்­கும் வல்­லு­நர்­களைக் கலந்து ஆலோ­சித்­து அதற்குப் பிறகு இதைச் செய்ய வேண்­டும்.

நடுத்­தர வய­தி­ன­ருக்கு பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போடும் சாத்­தி­யம் பற்றி ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!