பயங்கரவாதத்தை தடுக்க உதவிய உள்நாட்டு சட்டங்கள்

பயங்கரவாதத்தை தடுக்க உதவிய உள்நாட்டு சட்டங்கள்

2 mins read
b352cc8e-9bd7-4eb9-b3d7-5e78b24d3ff0
-

சிங்­கப்­பூ­ரின் சட்­டங்­கள் ஒரு­வர் தீவி­ர­வா­தச் சிந்­த­னைக்கு மாறும்­போது விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வும் நியூ­சி­லாந்­தில் ஏற்­பட்ட கத்­திக்­குத்து போன்ற பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­க­ளை­யும் தடுக்­க­வும் உத­வி­யுள்­ள­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் கூறி­யுள்­ளார்.

தாக்­கு­தல்­களை நடத்த யோசிப்­போரை அல்­லது திட்­ட­மி­டு­வோரை ஆரம்­ப­கட்ட நிலை­யி­லேயே தடுத்து வைக்க உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டம் உத­வு­வதை திரு சண்­மு­கம் சுட்­டி­னார். தீவி­ர­வா­தச் சிந்­தனை மறு­வாழ்வு பெற­வும் அது உத­வு­கிறது என்­றார் அமைச்­சர்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசிய திரு சண்­மு­கம், அமெ­ரிக்­கா­வில் 20 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நடந்த செப்­டம்­பர் 11 தாக்­கு­தல்­க­ளுக்­குப் பின்­னர் பல உல­க­நா­டு­களில் மோச­மான பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

பயங்­க­ர­வா­தத்­தைச் சமா­ளிக்க ஒவ்­வொரு நாட்­டுக்­கும் வெவ்­வேறு அணு­கு­மு­றை­கள் உள்­ளன என்­ற திரு சண்­மு­கம், இங்கு தீவி­ர­வா­தச் சிந்­த­னைக்கு மாறும் சில சம்­ப­வங்­க­ளைச் சமா­ளிக்க சில முக்­கிய அடிப்­ப­டை­ அம்சங்கள் சிங்­கப்­பூ­ருக்கு உத­வு­வ­தாகச் சொன்னார்.

நல்ல உள­வுத் தக­வல்­கள், வன்­முறை போக்­குக் கொண்ட தீவி­ர­வா­தத்தை சற்­றும் ஏற்­றுக்­கொள்­ளா­தது, சம­யங்­க­ளுக்கு இடையே வலு­வான உற­வைக் கொண்­டி­ருப்­பது ஆகி­ய­வற்­றை­யும் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த வாரம் நியூ­சி­லாந்து தலை­ந­கர் ஆக்­லாந்­தில் தீவி­ர­வாதி ஒரு­வர் ஒரு பேரங்­கா­டிக் கடை­யில் குறைந்­தது ஆறு பேரைக் கத்­தி­யால் குத்­திய சம்­ப­வத்­தைப் பற்­றி­யும் திரு சண்­மு­கம் பேசி­னார்.

அந் நபரை ஐந்­தாண்­டு­க­ளாக அதி­கா­ரி­கள் கண்­கா­ணித்து வந்­த­னர். பல முறை கைது செய்­யப்­பட்ட அவர், இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னர்­தான் வேறு குற்­றங்­க­ளுக்­காக காவ­லில் இருந்து விடு­விக்­கப்­பட்­டார். அந்­ந­பர் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தலை நடத்­து­வது கத்­தி­களை வாங்­கு­வது பற்­றி­யும் இணை­யத்­தில் தேடி வந்­தார்.

இந்த அறிகுறி­கள் இருந்­த­போ­தும் நியூ­சி­லாந்து சட்­டங்­ களின்­படி அவ­ரைக் கைது செய்ய முடி­ய­வில்லை என்று அமைச்­சர் சுட்­டி­னார். சிங்­கப்­பூ­ரில் இது நடந்­தி­ருக்­காது என்ற அவர், நியூ­சி­லாந்து அர­சாங்­கம் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டங்­களை வலுப்­ப­டுத்­து­வது பற்றி பரி­சீலித்து வரு­கிறது என்­றார்.

ஆப்­கா­னிஸ்­தா­ன் நிலவரம் பற்றி குறிப்பிட்ட திரு சண்­ மு­கம், பயங்­க­ர­வா­தக் குழுக்­கள் பயிற்சி அளிக்­க­வும் ஆயு­தங்­க­ளை­ப் பெற­வும் அந்­நாடு இடம் அளிக்­கும் என்று பல நாடு­க­ளின் பாது­காப்பு அமைப்­பு­கள் கவ­லைப்­ப­டு­வ­தாகக் கூறினார்.

ஆப்­கான் நில­வ­ரத்­தால் உட­னடி ஆபத்து இல்லை என்­றா­லும் இது இடைப்­பட்ட காலத்­தில் சிங்­கப்­பூர் தயா­ராக வேண்­டிய விவ­கா­ரம் என்றார் அவர்.