'நிதி மீள்திறனும் திறனாற்றலும் அவசியம்'

'நிதி மீள்திறனும் திறனாற்றலும் அவசியம்'

2 mins read
6dfabb08-0a91-43c6-883c-1c320c6c19f1
-

நிதி மீள்­தி­ற­னும் திற­னாற்­ற­லும் அவ­சி­ய­மானவை என்­றும் குறிப்­பாக உல­கம் தற்போது எதிர்­கொண்டு­வ­ரும் நெருக்­க­டி­யின்­போது அவை மிக­வும் தேவை என்றும் மனி­த­வள துணை அமைச்­சர் திரு­வாட்டி கான் சியாவ் ஹுவாங் கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரி­டம் இருப்­பு­நிதி உள்­ள­தால்­தான் பெருந்­தொற்று நேரத்­தில் ஏற்­பட்­டுள்ள உட­னடி தேவை­க­ளைச் சமா­ளிக்­க­வும் எதிர்­கா­லத்­தில் இன்­னும் வலு­வாக மீள்­வ­தற்­கான திறன்­களை வளர்த்­துக்­கொள்­ள­வும் முடிந்­துள்­ளது என்று திரு­வாட்டி கான் குறிப்­பிட்­டார்.

முந்­தைய தலை­மு­றை­யி­னர் பல்­லாண்­டு­க­ளுக்கு முன் நிதி குறித்து எடுத்த முடி­வு­களும் சிறிது­ சி­றி­தாக சேர்க்­கப்­பட்ட நிதி ­இருப்பும் ­தான் சிங்­கப்­பூ­ருக்கு இன்று உத­வின என்று அவர் கூறி­னார்.

"நிதி மீள்­தி­றன் உட­ன­டி­யாக உரு­வா­கி­வி­டாது. அர­சாங்­கம் மட்டுமல்­லாது சமூக அள­வி­லும் தனி­ ந­பரும் நிதி மீள்­தி­றன் பெற­வேண்­டும். அப்­போ­து­தான் நாம் உண்­மை­யான மீள்­தி­ற­னைப் பெற்­ற­தா­கக் கரு­த­லாம்," என்­றார் அவர்.

சிட்டி அற­நி­று­வ­ன­மும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கமும் இணை­யம் வழி­யாக நடத்­திய நிதித் திற­னாற்­றல் கருத்­த­ரங்­கில் திரு­வாட்டி கான் நேற்று பேசினார்.

மனி­சென்ஸ் நிதித் திற­னாற்­றல் திட்­டம் இவ்­வாண்டு ஏற்­பாடு செய்த கணக்­கெ­டுப்­பில் கலந்­து­கொண்­ட­வர்­களில் 25 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தங்­கள் ஓய்­வு­கா­லத் திட்­டங்­களில் ஓர­ளவு நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தாக கருத்­து­ரைத்­த­னர்.

சிட்டி அற­நி­று­வ­ன­மும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் 2012ஆம் ஆண்டு தொடங்­கிய நிதித் திற­னாற்­றல் திட்­டம் உள்­ளிட்ட வளங்­களும் தக­வல்­களும் ஓய்­வு­கா­லத்­துக்கு முன்­கூட்­டியே திட்­ட­மி­ட­ மக்களுக்கு உத­வும் என்று அவர் சொன்­னார்.

அந்­தத் திட்­டத்­தின்கீழ் இளை­யர்­க­ளுக்கு நிதி பற்­றிய கூடு­தல் மின்னிலக்கத் தக­வல்­களை வழங்க கூடுதல் திட்டங்கள் தொடங்கப்படும் என்று சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­ க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வர் முனைவர் லில்லி கோங் கூறி­னார்.