$2.4 மில்லியன் வெள்ளி தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டு

$2.4 மில்லியன் வெள்ளி தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டு

1 mins read
eed1606c-f519-45f0-a517-6d5004fe21df
-

வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தின் (வைல்­ட்லைஃப் ரிசர்வ்ஸ்) முன்­னாள் ஊழி­யர்­கள் உட்­பட 12 பேர் மீது ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

அவ்­வி­ரு­வ­ரில் ஒரு­வ­ரான 54 வயது பேரி சோங் பெங் வீ, 12 ஆண்­டு­களில் 2.4 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகைை லஞ்­ச­மா­கப் பெற்­ற­தாகச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. 2005ஆம் ஆண்­டுக்­கும் 2016ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

டேனி­யல் சோங் என்­றும் அழைக்­கப்­படும் அந்த ஆட­வர் மீது 107 ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

லஞ்­சப் பணத்தை வைத்து 'ரோலெக்ஸ்' சொகுசு கைக்­க­டி­கா­ரத்தை அவர் வாங்­கி­ய­தா­க­வும் சந்­தே­திக்­கப்­ப­டு­கிறது.

அதன் தொடர்­பி­லும் அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. சோங் புரிந்­த­தா­கச் சொல்­லப்­படும் குற்­றச் செயல்­க­ளு­டன் தொடர்பு இருந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 11 பேர் மீதும் பல ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. அவர்­களில் ஒரு­வர், வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தில் முன்பு வேலை செய்த 44 வயது சின் ஃபொங் யி.

அவ­ரும் குற்றம் சுமத்தப்பட்ட இதர 10 பேரும், தங்­க­ளின் நிறு­வனங்­க­ளுக்கு வர்த்­தக ரீதி­யாக உத­விக்­கொள்ள சோங்­கிற்கு லஞ்­சம் கொடுத்­த­தா­கச் சந்­தேகிக்­கப்­ப­டு­கிறது.