பாசிர் ரிஸ் வெள்ளம்: நிறுவனம் மீது நடவடிக்கை

பாசிர் ரிஸ் வெள்ளம்: நிறுவனம் மீது நடவடிக்கை

2 mins read
4e8328c1-a1d5-46a5-992d-5cb73e696a6d
'சேம்வோ' நிறுவனத்தின் செயலால் பாசிர் ரிஸில் சென்ற மாதம் ஏற்பட்ட வெள்ளம். கோப்புப் படம்/ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கட்டுமான நிறுவனமான சேம்வோ மீது பொதுப் பயனீட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. அனுமதி வழங்கப்படாத கால்வாய் பணிகளை மேற்கொண்டதால் பாசிர் ரிஸ் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.

சென்ற மாதம் 20ஆம் தேதி­யன்று தெம்­ப­னிஸ் அவென்யூ 10, பாசிர் ரிஸ் ட்ரைவ் 12 ஆகிய இரண்டு சாலை­க­ளின் சந்­திப்­பில் ஏற்­பட்ட வெள்­ளத்­தில் வாக­னங்­களும் மோட்­டர்­சைக்­கிள்­களும் சிக்­கின. அப்­ப­குதியில் பொதுவாக வெள்­ளம் ஏற்படுவதில்லை. ஆனால் சேம்­வோ­வின் செய­லால் அங்கு வெள்­ளம் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. பாதா­ளச் சாக்­கடை, வடி­கால் சட்­டத்­தின்­கீழ் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் சேம்வோ மீது குற்­றச்­சாட்டு­க­ளைப் பதி­வு­செய்­யும். கன­மழை, புயல் நீரைச் சேக­ரிக்­கும் கால்­வாய் கட்­ட­மைப்­பைப் பாதிக்­கும் செயல்களை மேற்­கொண்ட குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அதி­க­பட்­ச­மாக 50,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­படலாம். அனு­ம­தி­யின்றி கால்­வாய் கட்­ட­மைப்பை மாற்­றிய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அதி­க­பட்­ச­மாக 20,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

மேற்குறிப்பிடப்பட்ட சாலைச் சந்­திப்­பின் 200 மீட்­டர் நீளம்­கொண்ட பகுதி வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டது. 13 வாக­னங்­கள் நீரில் பாதி மூழ்­கின. தங்­க­ளின் மோட்­டார்­சைக்­கிள்­களை வெளி­யேற்ற பல ஓட்­டு­நர்­க­ளுக்கு உதவி தேவைப்­பட்­டது. குறைந்­தது ஒரு­வர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

பொது­வாக சிங்­கப்­பூ­ரில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டால் நீர் சுமார் அரை மணி­நே­ரத்­திற்­குள் வடிந்­து­வி­டும். ஆனால் இந்­தப் பிரச்­சினை சுமார் இரண்டு மணி­நே­ரத்­திற்கு நீடித்­தது.

அன்று பெய்த மழை நீரின் அளவைத் தாங்­கக்­கூ­டிய ஆற்­றல் கால்­வாய் கட்­ட­மைப்­பிற்கு இருந்­த­தாகப் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது.

அதில் சேக­ரிக்­கப்­படும் நீர், சுமார் ஒரு கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள சுங்கை அப்பி அப்பி கால்­வாய்க்­குச் செல்­லும். ஆகஸ்ட் 20ஆம் தேதி­யன்று நீரின் அளவு 50 விழுக்­கா­டா­கத்­தான் இருந்­ததாகத் தெரிவிக்கப்பட்டது. உணர்க்­க­ரு­வி­க­ளின் மூலம் அந்த விவ­ரங்­கள் தெரி­ய­வந்­தன.

கடந்த ஏப்­ரல் மாதம் ஐந்­தாம் தேதி­யி­லும் சென்ற ஆண்டு நவம்­பர் மாதம் 22ஆம் தேதி­யி­லும் இதே அளவு மழை பொழிந்­த­தா­க­வும் அவ்­விரு நாட்­க­ளி­லும் வெள்­ளம் ஏற்­பட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்டது.