வெளிநாட்டு சிங்கப்பூரர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு

வெளிநாட்டு சிங்கப்பூரர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு

1 mins read
0576f461-2b6d-407a-9b2a-b583df57ff5e
-

சாங்கி விமான நிலை­யம் அல்­லது தனா மேரா படகு முனை­யம் வழி­யாக இங்கு வரும் வெளிநாடு வாழ் சிங்­கப்­பூ­ரர்­கள், கட்­டாய மாக வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை முழுமை­யாக நிறை­வேற்­றா­மல் முதல் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டு அடுத்த விமானத்­திலோ பட­கிலோ தங்­கும் நாட்­டிற்­குத் திரும்­ப­லாம்.

இல்­லா­வி­டில், சிங்­கப்­பூர் வந்­த­வு­டன் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொண்டு, அர­சாங்­கம் நிர்­ண­யிக்­கும் இடத்­தில் கட்­டாய மாக வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை முழுமை­யாக நிறை­வேற்றி, தேவைப்­படும் இடைவெ­ளிக்­குப் பிறகு இரண்­டாம் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம். அதன் பின்­னர் அவர்­கள் தங்­கும் நாட்டிற்­குத் திரும்­ப­லாம். வெளி­யு­றவு அமைச்­சும் சுகா­தார அமைச்­சும் இத்­த­க­வலை இணைந்து வெளி­யிட்­டன. இதற்­கி­டையே, நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 568 பேருக்­குப் புதி­தாக கொவிட்-19 கிருமித்­தொற்று ஏற்­பட்­டது. கிரு­மித்­தொற்றுக்கு ஆளான ஒரு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 80 வயது ஆட­வர் உயி­ரி­ழந்­தார்.