ஆப்கானிஸ்தானிலிருந்து 2,200 பேரை வெளியேற்றும் பணியை சிங்கப்பூர் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
சென்ற மாதம் 26ஆம் தேதியன்று சிங்கப்பூர் ஆகாயப் படையின் எ330 எம்ஆர்டிடி விமானம் இங்கிருந்து கிளம்பியது. வெளியேற்றப்படும் ஆப்கானிஸ்தான் மக்களை விமானம் கத்தாரிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றது. இரு நாடுகளுக்கும் இடையே விமானம் பத்து முறை பயணம் செய்தது.
பணியில் ஈடுபட்ட வீரர்கள் சிலருக்கு இத்தகைய மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. வீரர்கள் இந்தப் பொறுப்பை பெருமையுடன் நிறைவேற்றினர்.
ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றும் பணியை நிறைவேற்றிய வீரர்களுக்குத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஃபேஸ்புக்கில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

