நியூட்டன் சர்க்கசுக்கு அருகிலுள்ள டன்னர்ர்ன் சாலையில் புதிதாக யூ-வளைவு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. ஊட்லலண்சை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா சாலைக்குள் சிரமமின்றி நுழைவதற்கு இந்த யூ-வளைவு வகை செய்யும்.
2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நியூட்டன் சர்க்கஸ் சாலையின் மேம்பாட்டுப் பணி தற்போது நிறைவுபெற்றுள்ளது. நகரை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா சாலையிலுள்ள மற்றொரு யூ வளைவு, 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்தப் புதிய மேம்பாட்டால் விபத்து குறையும் என்பதே அதிகாரிகளின் விருப்பம். இந்தப் பகுதியில் 2016ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையிலான வருடாந்திர விபத்துகளின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக தாமதமான இந்த சாலையின் கட்டுமானப் பணித்திட்டத்தால் ஆயிரக்கணக்கான வாகனமோட்டிகள் பயனடைவர்.

