துவாஸ் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான முதல் இரண்டு அணைகரைகள் இவ்வாண்டின் இறுதிக்குள் திறக்கப்படும். இது, கடல்துறை மையம் என்ற அங்கீகாரத்தை சிங்கப்பூருக்கு மேலும் வலுப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அரசிதழில் பதிப்பிக்கப்பட்டுள்ள குடிநுழைவுச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி, துவாஸ் துறைமுகம் சிங்கப்பூருக்கு கப்பல்கள் வரும்படியான அல்லது இங்கிருந்து போகும்படியான இடமாக செயல்படும்.
துறைமுகத்தின் உள்கட்டமைப்புக்குத் தேவைப்படும் கட்டுமானப் பணிகள் சுமுகமாக நடைபெற்று வருவதாக பிஎஸ்ஏ சிங்கப்பூர் தெரிவித்தது. மேம்பட்ட துறைமுகக் கருவிகளின் ஆரம்பக்கட்ட இறக்குமதிகள் துவாஸ் துறைமுகத்தை அடைந்துவிட்டதாகவும் அந்தக் கருவிகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் துவாஸ் நிறுவனம் தெரிவித்தது.
புதிய மாபெரும் துறைமுகம் நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளன. இதற்கான செலவு 20 பில்லியனுக்கும் அதிகம் என்று தெரிகிறது.

