கூசு தீவு சமய விழாவுக்கு தினமும் 500 பேர் வரை மட்டுமே அனுமதி

கூசு தீவு சமய விழாவுக்கு தினமும் 500 பேர் வரை மட்டுமே அனுமதி

2 mins read
7d8500e3-093a-4206-b427-727c45faa6ab
-

கூசு தீவில் சுமார் ஒரு மாத காலம் மேற்­கொள்­ளப்­பட இருக்­கும் புனி­தப் பய­ணத்­துக்­கான கட்­டுப்­பா­டு­களை சிங்­கப்­பூர் நில ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ளது. அந்­தத் தீவில் துவா பெக் கோங் சீனக் கோவில் உள்­ளது. இது தவிர, மலாய் வழி­பாட்­டுத்­த­லங்­கள் மூன்று அங்கு உள்­ளன.

அக்­டோ­பர் 6 முதல் நவம்­பர் 4 வரை அங்கு நடை­பெ­றும் சமய விழாக்­க­ளுக்­குச் செல்­வோ­ரின் எண்ணிக்­கை கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. இந்த நாள்­களில் நாள் ஒன்­றுக்கு 500 பேர் மட்­டுமே கூசு தீவு செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

மேலும், தீவுக்­குச் செல்­லும் பய­ணப் படகு ஒன்­றில் 50க்கு மேற்­பட்­டோ­ருக்கு அனு­மதி இல்லை என்று ஆணை­யம் நேற்று கூறி­யது.

காலை 7 மணி தொடங்கி மாலை 4 மணி வரை படகு சேவை நடை­பெ­றும். மணிக்­கொரு பய­ணப் படகு அந்­தத் தீவிற்­குச் செல்­லும். கடந்த ஆண்டு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்ட நிலை­யில் எத்­த­கைய விதி­மு­றை­கள் இந்த விழா­வுக்கு அறி­மு­கம் செய்­யப்­பட்­ட­னவோ கிட்­டத்­தட்ட அதே­போன்ற விதி­ ­மு­றை­கள் தற்­போ­தும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன.

கூசு தீவு சமய விழா­வில் பங்­கேற்க ஆண்­டு­தோ­றும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் செல்­வது உண்டு.

இவ்­வாண்டு இந்த விழா­வுக்­குச் செல்­வ­தற்­கான நுழை­வுச் சீட்­டு­களை நாளை 14ஆம் தேதி முதல் சிங்­கப்­பூர் தீவு உல்­லாப் பய­ணப் படகு சேவை (எஸ்­ஐசி) இணை­யத்­த­ளத்­தில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அல்­லது சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தின் கியூ­ஆர் குறி­யீட்டை வருடி நுழை­வுச்­சீட்டு பெற­லாம். திங்­கள் முதல் வெள்ளி வரை 16 வெள்­ளி­யா­க­வும் வார இறு­தி­களில் 18 வெள்­ளி­யா­க­வும் அந்­தக் கட்­ட­ணம் இருக்­கும்.

12 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்­க­ளுக்­கான கட்­ட­ணம் 12 வெள்ளி.

பட­கில் ஏறு­முன்­னர் பய­ணி­கள் அனை­வ­ரும் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னம் அல்­லது செயலி மூலம் வரு­கைப் பதிவை மேற்­கொள்­வது அவ­சி­யம் என­வும் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.