சைனாடவுன் காம்ப்ளக்ஸ் மூடப்பட்டது

சைனாடவுன் காம்ப்ளக்ஸ் மூடப்பட்டது

1 mins read
6d2fed62-e66b-4482-860f-e3b38332e340
-

தொற்­றுக் குழு­மம் உரு­வா­ன­தன் கார­ண­மாக சைனா­ட­வுன் காம்ப்­ளக்ஸ் பொது­மக்­க­ளுக்கு நேற்று பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் மூடப்­பட்டது. புதன்­கி­ழமை இரவு 11.59 மணி­வரை அது மூடப்­பட்டு இருக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சைனா­ட­வுன் காம்பிளக்ஸ் வளா­கத்­தில் தலை­காட்­டிய கொவிட்-19 தொற்­றுக் குழு­மத்­தில் மொத்­தம் 66 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்ளது.

இங்கு ஏற்­பட்ட தொற்­றுக்­கு­ழு­மத்­து­டன் தொடர்­பு­டைய 66 பேரில் 63 பேர் அங்கு வேலை பார்ப்­ப­வர்­கள். அந்த 63 பேரில் நால்­வர் துப்­பு­ர­வா­ளர்­கள், மற்­றொருவர் பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்.

மற்ற மூவ­ரும் கிருமி தொற்­றிய குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் என அமைச்சு கூறி­யது. ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

இங்­கி­ருந்து கிருமி பர­வு­வதை விரை­வா­கத் தடுக்­கும் நோக்­கத்­து­டன், இம்­மா­தம் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சைனா­ட­வுன் காம்ப்­ளக்ஸ் கட்­ட­டத்­திற்கு 'சேஃப் எண்ட்ரி' பதி­வு­மு­றை­யைப் பயன் படுத்தி சென்று இருப்­போ­ருக்கு சுகா­தார ஆபத்து விழிப்­பூட்டு எச்­ச­ரிக்­கைக் கடி­தம் கொடுக்­கப்­படும்.

அவர்­கள் உட­ன­டி­யாக பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். 14 நாட்­கள் சமூ­கக் கலந்­து­ற­வா­டல்­களை அவர்­கள் தவிர்த்­துக்­கொள்­ள­ வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, சைனா­ட­வுன் காம்­ப்ளக்ஸ் கடைத்­தொ­கு­தியை மூடும் உத்­த­ரவை சனிக்­கி­ழமை இரவு நேரத்தில் சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டது. இத­னால் இங்­குள்ள சுமார் 700 கடை­கள் நேற்­றைய ஞாயிற்­றுக்­கி­ழமை வியா­பா­ரத்தை இழந்­தன. நாளை மறு­தி­னம் இரவு வரை இந்த நிலையே அங்கு தொட­ரும்.