நியூட்டன் சர்க்கஸ் அருகே புதிய சாலை திருப்பம்

நியூட்டன் சர்க்கஸ் அருகே புதிய சாலை திருப்பம்

2 mins read
375a0f1d-c49c-46b7-a0e5-c91ceb1cbe4e
நியூட்டன் சர்க்கஸ் பகுதி. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் ைடம்ஸ் -

நியூட்­டன் சர்க்­கஸ் அரு­கே­யுள்ள டன்­னர்ன் ரோட்­டில் நேற்று புதிய 'யூ-டர்ன்' செய்­யும் வசதி தொடங்­கி­யது. உட்­லண்ட்ஸ், புக்கிட் தீமாவை நோக்கி பய­ணிக்க விரும்­பும் ஓட்­டு­நர்­கள் இனி, போக்­கு­வ­ரத்து நெரி­சல் அதி­க­மாக ஏற்­படும் 'ரவுண்­ட­ப­வுட்'டிற்­கா­கக் காத்­தி­ருக்­கத் தேவை­யில்லை.

நியூட்­டன் சர்க்­க­ஸில் 2017ல் தொடங்­கிய மேம்­பாட்டுப் பணி­கள் இத்­து­டன் முடிவு பெற்­றன.

உட்­லண்ட்ஸ், புக்கிட் தீமா­வி­லி­ருந்து வரும் வாக­னங்­க­ளுக்­கான யூட்­டர்ன் வசதி, ஜூலை மாதம் தொடங்­கி­யது.

2016லிருந்து 2018 வரை ஆண்­டு­தோ­றும் நியூட்­டன் சர்­கஸ் பகு­தி­யில் சுமார் ஒன்­பது விபத்­து­கள் பதி­வா­யின. இந்த புதிய யூட்­டர்ன் வச­தி­கள் மூலம் 'ரவுண்­ட­ப­வுட்'டைப் பயன்­ப­டுத்­தும் வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை குறை­யும் என்று அதிகாரிகள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர்.

நோய்த்­தொற்­றால் தாம­த­மடைந்­துள்ள இம்­மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் முடி­வால் ஆயி­ரக்­கணக்­கா­னோர் பய­ன் அடையக் கூடும்.

இப்­ப­கு­தி­யைப் பிர­தி­நி­திக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான கலா­சார, சமூக, இளை­யர்­துறை துணை அமைச்­சர் திரு ஆல்­வின் டான், குழப்­பம் தரக்­கூ­டிய நியூட்­டன் சர்­க்க­ஸில் வாக­னத்­தைச் செலுத்த ஓட்­டு­நர்­க­ளுக்­குப் புதிய யூட்­டர்ன் வசதி துணை புரி­யும் என்­றார்.

சிங்­கப்­பூர் சீன பெண்­கள் பள்ளி, 'ஏசி­எஸ் (பார்க்­கர் ரோடு)' போன்று, நியூட்­டன் சர்க்கஸ் அருகே உள்ள பள்­ளி­களில் தங்­கள் பிள்­ளை­களை இறக்­கி­வி­டும் பெற்­றோ­ருக்­கும் உச்ச நேர போக்­கு­வ­ரத்­தைச் சமா­ளிக்க இது உத­வும் என்­றும் அவர் நம்­பு­வ­தாக தெரி­வித்­தார்.

ஜூலை மாதம் தொடங்­கப்­பட்ட யூட்­டர்ன் வச­தியை விட இந்த புதிய யூட்­டர்ன் வசதி போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்­கும் என்­றும் அவர் கூறி­னார். "சென்ற ஆண்டு பல குடி­யி­ருப்­பா­ளர்­களை நான் சமா­தா­னப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது." என்று கூற­னார் துணை­ய­மைச்­சர். கடந்த ஆண்­டு­களில் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நியூட்­டன் சர்­க்க­ஸில் பல மாற்றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நியூட்­டன் எம்­ஆர்டி நிலை­யத்தை எளி­தில் சென்­ற­டைய ஜூலை மாதம் நியூட்­டன் ரோட்­டிற்­கும் டன்­னர்ன் ரோட்­டிற்­கும் இடையே பாத­சா­ரி­க­ள் கடந்துசெல்லும் பாதை ஒன்று தொடங்­கப்­பட்­டது. அடுத்த சாலைத்­த­ளத்­தில் நுழை­வ­தைத் தவிர்க்க, புக்கிட் தீமா ரோட்­டில் உள்ள பேருந்து நிறுத்­தம் ஒன்று மீண்­டும் கட்­டப்­பட்­டது.

ஜூன் மாதம் வாக­னங்­க­ளுக்கு, குறிப்­பாக பொது பேருந்­து­க­ளுக்கு கூடு­தல் வழி வகுக்க நியூட்­டன் சர்க்­கஸை ஆணை­யம் அக­லப்­ப­டுத்­தி­யது. இது வாக­னங்­க­ளைத் திருப்­பும்­போது ஏற்­படும் சிர­மாங்­க­ளைக் குறைத்­தது.

புக்கிட் தீமா கிளமென்ஸ்­சியூ அவென்யூ நார்த்­தில் உள்ள 'ரவுண்­ட­ப­வுட்'டில் போக்­கு­வ­ரத்து விளக்­கு­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் 'பால்­மோ­ரல் பிளாஸா' சந்­திப்­பில் ஏற்­ப­ட­வி­ருக்­கும் மேம்­பாட்டுப் பணி­கள் குறித்­தும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.