தொற்றுகால பழக்கம் பிள்ளையை பாதிக்கும்

தொற்றுகால பழக்கம் பிள்ளையை பாதிக்கும்

2 mins read
29ca61fe-8f87-4f0f-b866-8c56275bfdb1
-

குழந்தைகள் வளர்ச்சி தொடர்பில் வல்லுநர்கள் எச்சரிக்கை

கொவிட்-19 தொற்று கார­ண­மாக பிள்­ளை­க­ளின் வளர்ச்சி மேம்­பாட்டில் ஏற்­ப­டக்­கூ­டிய உண்­மை­யான தாக்­கங்­கள் அதி­கம் என்று வல்­லு­நர்­கள் எச்­ச­ரிக்­கி­றார்­கள்.

தாம­த­மான வளர்ச்சி காணப்­படு­வ­தாக கண்­டு­பி­டிக்­கப்­ப­ட்ட பிள்ளை­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஐந்து ஆண்­டு­களில் 20% அதி­க­மாகி இருக்­கிறது என்பது ஆகப் புதிய புள்­ளி­வி­வரங்­கள் மூலம் தெரியவரு­கிறது.

கேகே­ மாதர், சிறார் மருத்­து­வ­மனை, தேசிய பல்­க­லைக் கழக மருத்­து­வ­மனை ஆகி­யவை சென்ற ஆண்­டில் ஏறத்­தாழ 5,000 பாலர்­பள்ளி பிள்­ளை­க­ளி­டம் இத்தகைய பிரச்­சி­னை­யைக் கண்­ட­தாக சுகா­தார அமைச்சை மேற்­கோள்­காட்டி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

இந்த எண்­ணிக்கை, சென்ற 2015ஆம் ஆண்­டில் 4,000 ஆக இருந்­தது. 2010ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சென்ற ஆண்­டின் அளவு இரண்டு மடங்­கா­கும்.

பிள்­ளை­க­ளி­டம் காணப்­ப­படும் அத்­த­கைய ஒரு நில­வ­ரத்­தைப் பற்றி பெற்­றோர் முன்­பை­விட இப்­போது சிறந்த முறை­யில் புரிந்து கொண்டு இருக்­கி­றார்­கள் என்­றும் இதுவே இந்த அதி­க­ரிப்­புக்கு காரணம் என்­று அமைச்சு கூறியது.

புதி­தாக பாதிக்­கப்­பட்ட பிள்ளை­களில் 60 விழுக்­காட்­டி­ன­ருக்கு பேச்சு, மொழி தாம­தப் பிரச்­சி­னை­கள் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

தொற்று தலை­காட்­டி­யது முதல் அள­வுக்கு அதிக நேரம் கைபேசி, தொலைக்­காட்சி, கணி­னித் திரை யிலேயே நேரத்­தைச் செல­வி­டு­வது­தொடர்­பான பிரச்­சி­னைகள் கார­ண­மாக சிகிச்­சைக்கு அதி­கம் பேர் வந்­தி­ருப்­ப­தாக தேசிய பல்­கலைக்கழக மருத்­து­வ­மனை தெரி­விக்­கிறது.

இது­பற்றி கருத்து தெரி­வித்த இந்த மருத்­து­வ­ம­னை­யின் சிறார் வளர்ச்சிப் பிரி­வின் மூத்த ஆலோ­ ச­கர் டாக்­டர் ஜெனி­ஃபர் கிங், ஒரு பிள்ளை வேறு ஒரு­வ­ரு­டன் பேசிப் பழ­கும்­போ­து­தான் பேச கற்­றுக் கொள்­கிறது என்­பதைப் பெற்­றோர் புரிந்­து­கொள்­ள­ வேண்டும் என்­றார்.

வெறு­மனே திரை­யைப் பார்த்­துக்கொண்டே பொழு­தைக் கழிப்­பதால் எண், எழுத்து, வடி­வங்­களைத் தெரிந்­து­கொள்­ள­லாம்.

ஆனால் அப்பா, அம்மா போன்ற பேச்­சு­களை உச்­ச­ரிப்­பது எப்­படி என்­ப­தைச் சரி­வர கற்­றுக்­கொள்ள முடி­யாது என்று அந்த மருத்­து­வர் விளக்­கி­னார்.

பிறந்து 18 மாதங்­கள் ஆகாத குழந்­தை­கள் காணொளி அழைப்பு­களை வேண்­டு­மா­னால் பார்க்­க­லாம்.

ஆனால் கைபேசி, தொலைக்­காட்சி போன்ற திரை­களை அறவே பார்க்­கக்­கூ­டாது என்று அமெ­ரிக்க குழந்தை மருத்­து­வப் பயி­ல­கத்­தின் வழி­காட்டி நெறி­மு­றை­கள் தெரி­விக்­கின்­றன.

பிள்­ளை­க­ளி­டம் ஏதே­னும் பிரச்­சினை தெரிந்­தால் அவர்களிடம் வளர்ச்சி தாமதம் எந்த அள­வுக்கு இருக்­கி­ற­து­ என்­பதை மதிப்­பிட பெற்­றோர் காலம் தாழ்த்­த­தா­மல்­ முன்­வர வேண்­டும்.

மருத்­து­வ­ரைப் பார்ப்­ப­தில் கால தாம­தம் கூடாது என்று கேகே­ மருத்­து­வ­மனை சிறார் வளர்ச்­சித் துறை இணை ஆலோ­ச­கர் டாக்­டர் கிறிஸ்­டில் டான் ஆலோ­சனை கூறி­னார்.