துணைப்பாட வகுப்புகள்: இருவழி ஏற்பாடு நீடிக்கும்

துணைப்பாட வகுப்புகள்: இருவழி ஏற்பாடு நீடிக்கும்

2 mins read
479f3c7f-5a22-4e3e-8cb0-6825cc9c1b92
-

சிங்­கப்­பூ­ரில் துணைப்­பாட வகுப்­பு­களைப் பொறுத்தவரை நேரடி, இணை­யம் என்ற ஏற்­பாடு தொடர்ந்து இருந்துவரும் என்று தெரி­கிறது.

'மேட்4மேத்' என்ற துணைப்­பாட வகுப்பு நிலை­யத்தை நடத்தி வரும் திரு­வாட்டி கேரொலின் டான், கொவிட்-19 தொற்று மறைந்த பிற­கும் வகுப்­பு­களில் இணை­யம் வழி­யா­க­வும் நேர­டி­யா­க­வும் மாண­வர்­கள் கலந்­து­கொள்­ளும் ஏற்­பாடு தொடர்ந்து இருந்து வரும் என்று கருத்து தெரி­வித்­தார்.

தொழில்­நுட்­பத்­தைத் தழு­விக் கொள்­வது இவ­ரி­டம் பயி­லும் மாண­வர்­க­ளுக்­கும் இவ­ருக்­கும் நல்ல பல­ன­ளிப்­ப­தா­க­வும் எளி­மை­யா­ன­தா­க­வும் இருக்­கிறது.

"என்­னி­டம் படிக்­கும் மாண­வர்­களில் மூன்­றில் ஒரு பங்­கி­னர் மட்­டுமே நேர­டி­யாக வகுப்­பு­க­ளுக்கு வரு­கி­றார்­கள்.

"மற்­ற­வர்­கள் ஸூம் மூலம் கலந்­து­கொள்­கி­றார்­கள்," என்று இவர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

"எல்லா மாண­வர்­க­ளுக்­குமே இணைய வகுப்­பு­கள் ஒத்­து­வ­ரும் என்று சொல்ல முடி­யாது.

"குறிப்­பாக சில சிறார்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­, ஸூம் வழி படிப்­பது சிர­ம­மாக இருக்­கிறது," என்று திரு­வாட்டி டான் தெரி­வித்­தார்.

இவ­ரி­டம் படிக்­கும் மாண­வர்­களில் ஒரு­வான ஷெர்ஸ் சியா, 16, இணை­யம் மூலம் வகுப்­பு­களில் கலந்­து­கொள்­வ­தால் தனக்கு ஏறத்­தாழ 3 மணி நேரம் மிச்­ச­மா­கிறது என்று தெரி­வித்­தார்.

போக்­கு­வ­ரத்து தேவை­யில்லாமல் போவ­தால் தூங்­கு­வ­தற்கு அதிக நேரம் கிடைப்­ப­தாக அவர் கூறு­கிறார்.

சென்ற ஆண்­டில் கொவிட்-19 சூழ்­நிலை மோச­மா­ன­தால் அவர் படிக்­கும் துணைப்­பாட நிலை­யம் முற்­றி­லும் இணைய வழி போதனை முறைக்கு மாறி­யது.

இப்­போது கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு இருப்­ப­தால் அந்த மாணவி கலந்­து­கொள்­ளும் வகுப்­பு­கள் உள்­ளிட்ட சில வகுப்­பு­கள் இரு பாணி முறைக்கு மாறி இருக்­கின்­றன.

சில மாண­வர்­கள் நேர­டி­யாக வந்து வகுப்­பு­களில் கலந்­து­கொள்­கி­றார்­கள். மற்­ற­வர்­கள் ஸூம் மூலம் படிக்­கி­றார்­கள்.

மாணவி ஷெரிஸைப் போன்ற சில மாண­வர்­க­ளைப் பொறுத்­த­வரை, நேர­டி­யாக துணைப்­பாட வகுப்­பு­களில் கலந்­து­கொள்­வது இப்­போதெல்லாம் அவ்­வ­ளவு கவர்ச்சி­க­ர­மாக இல்லை என்று தெரி­கிறது.

எதிர்­கா­லத்­தில் இணை­யம் வழி அல்­லது நேர­டி­யாக மாண­வர்­கள் கலந்­து­கொள்­ளும் வகுப்­பு­கள் வழமை­யா­கி­வி­டும் என்­ப­தால் பிள்ளை­களுக்கு எந்த முறை சிறப்­பா­கப் பல­ன­ளிக்­கும் என்­பதை மாண­வர்­களும் பெற்­றோ­ரும்­தான் முடிவு செய்ய வேண்டி இருக்­கும் என்று துணைப்­பாட வகுப்பு ஆசி­ரி­யர்­கள் கூறு­கி­றார்­கள்.