தொற்று சூழலிலும் மாதம் 1,000 புதிய உணவு, பானக் கடைகள் திறப்பு

தொற்று சூழலிலும் மாதம் 1,000 புதிய உணவு, பானக் கடைகள் திறப்பு

1 mins read
975d4673-a6db-4cca-b88c-0b8f098ab4ca
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள், கட்­டுமான தாம­தங்­கள் இடம் பெற்று வந்­தா­லும் மாதம் புதி­தாக ஏறத்­தாழ 1,000 புதிய உணவு, பானக் கடை­கள் திறக்­கப்­பட்டு உள்ளன.

இங்கு சென்ற ஆண்டு ஜூன் மாதத்­திற்­கும் இந்த ஆண்டு ஜூன் மாதத்­திற்­கும் இடை­யில் சராச­ரி­யாக ஒவ்­வொரு மாத­மும் 1,000 புதிய உணவு, பான சில்­லறை வர்த்­த­கக் கடை­கள் திறக்­கப்­பட்டு உள்­ள­தாக நைட் ஃபிரங்க் நிறுவனம் தனது ஜூலை மாத அறிக்கை­யில் தெரி­வித்­துள்­ளது.

புதிதாக திறக்­கப்­பட்ட கடை­களின் எண்­ணிக்கை, மூடப்­பட்ட கடை­க­ளின் எண்­ணிக்­கையைவிட அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.

இதை­விட குறிப்­பி­டத்­தக்க வேறு ஓர் அம்­ச­மும் இருக்­கிறது.

அதா­வது, தொற்­றுக்கு முந்­தைய காலத்­து­டன்- 2017 மற்­றும் 2019ஆம் ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் தொற்று காலத்­தில் அதி­க­மான கடை­கள் திறக்­கப்­பட்டு உள்­ளன.

இந்த ஆண்­டு ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்­தில் 33,230 கடை­கள் மூடப்­பட்­டன. திறக்­கப்­பட்ட கடை­கள் 44,317 என்று கணக்­குப் பதி­வி­யல் மற்­றும் நிறுவன ஒழுங்­கு­முறை ஆணை­யம் தெரி­விக்­கிறது.

புதி­தாக திறக்­கப்­பட்ட கடை­களில் ஒன்­றான 'அன­லாக்' என்ற கடை, சைம்ஸ் (Chijmes) கட்­டடத்­தில் அமைந்­துள்­ளது. அதன் உரிமை­யா­ள­ரான திரு விஜய் முத­லி­யார், 32, காலம் சிர­ம­மாக இருந்­தா­லும் காத்­தி­ருக்க இய­லாது என்று தெரி­வித்­தார்.