பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய ஆடவர்க்கு 24 வாரங்கள் சிறை

பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய ஆடவர்க்கு 24 வாரங்கள் சிறை

1 mins read
56b79f73-9b1f-46b7-b1fd-0b492f5e4ae5
-

மூக்கையும் வாயையும் மறைக்கும் வகையில் முகக்கவசத்தை முறையாக அணியும்படி கூறிய பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய ஆடவர்க்கு 24 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஷேக் முகம்மது அப்துல் சமத் ஹஜி அப்துரஹீம், 46, என்ற அந்த ஆடவர், லோ சுன் கியாட் என்ற 28 வயது மலேசிய ஓட்டுநரின் முகத்தில் கீறியதாகவும் அவரது முகக் கவசத்தைப் பிடித்துக் கீழிறக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.

அத்துடன், பேருந்தின் கட்டுப்பாட்டு நெம்புகோலையும் அவர் இழுத்து, ஏறத்தாழ 1,500 வெள்ளிக்குச் சேதம் விளைவித்தார். இவ்வாண்டு பிப்ரவரி 16ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு ஜூரோங் ஈஸ்ட் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில், எண் 334 பேருந்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

தன்மீதான தாக்குதல், துன்புறுத்தல், தொல்லை தருதல் ஆகிய மூன்று குற்றச் சாட்டுகளையும் சமத் ஒப்புக்கொண்டார்.