பாதுகாப்பு இடைவெளித் தூதரின் முகக்கவசத்தை இழுத்ததாக புகார்

பாதுகாப்பு இடைவெளித் தூதரின் முகக்கவசத்தை இழுத்ததாக புகார்

1 mins read
91ead17a-f77e-488e-9a81-f621c4c372ed
-

பாதுகாப்பு இடைவெளித் தூதர் ஒருவரின் முகக்கவசத்தைக் கீழிறக்கிவிட்டதாக பெண்மீது போலிசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. மரினா பே சேண்ட்சில் கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

செந்நிறச் சீருடையில் இருந்த பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் இருவருடன் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் வாக்குவாதம் செய்வதைச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் காட்டின.

ஒருகட்டத்தில், பெண் தூதரின் முகக்கவசத்தைப் பிடித்து, அந்தப் பெண் கீழிறக்கிவிடுவது தெரிகிறது. பின்னர் அவர், ஆண் பாதுகாப்பு இடைவெளித் தூதரிடம் சென்று வாக்குவாதம் செய்வதும் காணொளியில் தெரிகிறது.

இச்சம்பவம் பற்றிக் கேட்டதற்கு, "மரினா பே சேண்ட்சில் உள்ள அந்த உணவு, பான நிலைய ஊழியர்களும் பாதுகாப்பு இடைவெளித் தூதர்களும் திரும்ப திரும்ப அறிவுறுத்தியும், இரவு 10.30 மணிக்குப் பிறகும் அந்த வாடிக்கையாளர்கள் மது அருந்துவதை நிறுத்தவில்லை என்று சந்தேதிக்கப்படுகிறது," என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கான செயல்பாட்டு இயக்குநர் செரீன் டான் தெரிவித்தார்.