போர் நினைவுப் பூங்காவில் 'வேக்போர்டிங்' எனும் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24 வயது இளையர்மீது நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
ஸ்டீஃபன் கோவல்கோவ் என்ற அந்த இளையர் கடந்த ஜூலை 17ஆம் தேதி அந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் மீண்டும் முன்னிலையாக வேண்டும்.
அந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படும் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்ட மேலும் நால்வரிடம் விசாரணை நடந்து வருகிறது.


