பயன்பாடு குறைந்துவிட்டது; கீழறுப்புச் சட்டத்தை ரத்து செய்ய உள்துறை அமைச்சு விருப்பம்

பயன்பாடு குறைந்துவிட்டது; கீழறுப்புச் சட்டத்தை ரத்து செய்ய உள்துறை அமைச்சு விருப்பம்

2 mins read
c3915289-6f74-4536-a4ad-da055870c851
-

கீழ­றுப்­புச் சட்­டத்தை ரத்து செய்­து­விட லாம் என்று உள்­துறை அமைச்சு விரும்­பு­கிறது. அந்­தச் சட்­டம் 1938ஆம் ஆண்டு இயற்­றப்­பட்­டது. அதுமுதல் ஆறு முறை மட்­டுமே அந்­தச் சட்­டம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது.

கீழ­றுப்பு (ரத்து) சட்­டம் நேற்று நாடாளு­ மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

கீழ­றுப்பு நோக்­கங்­க­ளு­டன் கூடிய நடத்தை­களை அந்­தச் சட்­டம் குற்­ற­மாக்கு­ கிறது. கீழ­றுப்­புச் செய்­தி­க­ளைக் கொண்டு உள்ள செய்­தித்­தாட்­கள் வெளி­யீட்டை நிறுத்தி வைக்­க­வும் அத்­த­கைய வெளி­யீடு க­ளின் விநி­யோ­கத்தைத் தடுக்­க­வும் அந்தச் சட்­டம் நீதி­மன்­றத்­திற்கு அதி­கா­ரம் அளிக்­கிறது.

கீழ­றுப்­புச் சட்­டம் கடை­சி­யாக 2016ல் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இணை­யத்­தில் பதிவு­களை இடம்­பெ­றச் செய்து அதன் வழி­யாக வெளி­நாட்­டி­னருக்கு எதி­ரான உணர்­வு­களுக்கு ஊக்­க­மூட்­டிய 'தி ரியல் சிங்­கப்­பூர்' என்ற இணையத்தளத்­தின் பின்­ன­ணி­யில் இருந்து செயல்­பட்ட தனி­ந­பர்­களுக்கு எதி­ரான வழக்­கில் அந்­தச் சட்­டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

காலப்போக்­கில் பல புதிய சட்­டங்­கள் சூழ்­நி­லைக்கு ஏற்ப நடப்­புக்கு வந்­துள்ளதை அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது. சமய நல்­லிணக்கப் பரா­ம­ரிப்­புச் சட்­டம், நீதி நிர்­வா­கம் (பாது­காப்பு) சட்­டம், விரும்­பத்­த­காத வெளி­யீட்­டுச் சட்­டம், செய்­தித்­தாள், அச்சீட்டு நிறு­வ­னச் சட்­டம் முத­லா­னவை அவற்­றில் உள்­ள­டங்­கும்.

இவற்­றின் கார­ண­மாக கீழ­றுப்­புச் சட்­டத்­தின் பயன்­பாடு மிக­வும் குறைந்­து­விட்டது என்­றும் அதை ரத்து செய்துவிட­லாம் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

இருந்­தா­லும் அந்­தச் சட்­டத்­தின் ஓர் அம்­சம் இன்­ன­மும் ஏற்­புடையதாக இருக்­கிறது என்­றும் அமைச்சு தெரி­வித்­துள்ளது.

அதா­வது வெவ்­வே­றான குழுக்­க­ளுக்கு இடை­யில் சமூ­கப் பிணைப்பை உறுதிப்படுத்த அந்த அம்­சம் வகை செய்­கிறது. இதில் தொடர்ந்து போதிய அள­வுக்­குக் கவ­னம் செலுத்­தப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த தண்டனை விதித் தொகுப்பு திருத்­தப்­பட வேண்­டும் என்­றது அமைச்சு.

ஆகை­யால், இதற்­கான திருத்­தங்­களை அமைச்சு முன்­மொ­ழி­கிறது. கீழ­றுப்­புச் சட்டத்­தின்­படி குற்­ற­வா­ளி­க­ளைக் கைது செய்ய முடி­யும். அந்­தச் சட்­டம் ரத்­தா­கும்­போது கைது அதி­கா­ரத்­தைக் கையாள போதிய ஏற்­பாடு தேவை என்று மசோதா விரும்­பு­கிறது.

போலி­சார் இன்­ன­மும் விரை­வாக ஆற்றலு­டன் செயல்­ப­டு­வதை உறு­திப்­படுத்த இப்­போது தண்­டனை விதித்­தொ­குப்­பின் கீழ் வரும் இதர குற்­றச்­செ­யல்­களைக் கைது செய்­யத்­தக்க குற்­றச்­செ­யல்­க­ளாக மாற்ற வேண்­டும் என்று உள்­துறை அமைச்சு உத்­தே­சிக்­கிறது.

ஒரு­வ­ரின் சமய, இன உணர்­வு­களை வேண்­டு­மென்றே காயப்­ப­டுத்­து­வது; வெவ்­வே­றான இன, சம­யக் குழுக்­க­ளுக்கு இடையே பிள­வைத் தூண்டிவிடு­வது, இன சம­யக் குழுக்­க­ளுக்கு இடை­யில் நல்­லி­ணக்­கம் கெடு­வ­தற்கு வகை செய்­யும் செயல்­க­ளைச் செய்­வது போன்­றவை அந்தக் குற்­றச்­செ­யல்­களில் உள்­ள­டங்­கும்.