வீவக வீட்டு மானியம் முறை தானியக்கம்

2 mins read
45c7f1f0-12b7-437d-8f0f-c40acfaa640e
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் மானிய விநி­யோக முறை தானி­யக்­க­ம­ய­மா­கிறது. விண்­ணப்­ப­தா­ரர்­கள் மானி­யம் பெறத் தகுதி பெறு­கி­றார்­களா என்­ப­தை­யும் இந்த முறையே தீர்­மா­னிக்­கிறது.

தானி­யக்­க­ம­ய­மா­ன­தும் மானியம் பெற ஒரு­வர் தகுதி பெறு­கி­றாரா இல்­லையா என்­ப­தைப் புதிய முறை துல்­லி­ய­மா­கக் கணித்­து­விடும்.

சொத்து உடைமை பற்­றிய அல்லது மாற்று வரு­மா­னம் பற்றிய தக­வல்­களை வீவ­க­வி­டம் தெரிவிக்க விண்­ணப்­ப­தா­ரர்­கள் தவ­றி­னா­லும்­கூட புதிய தானி­யக்க முறை அவர்­கள் தகுதி பெறு­கி­றார்­களா என்­பதைக் கணித்­து­வி­டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

தகுதி பெறாத 13 விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு மொத்­தம் $405,000 வீட்டு மானி­யம் கொடுக்­கப்­பட்­ட­தாக கடந்த ஜூலை மாதம் தலைமைக் கணக்­குத் தணிக்கை அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து அமைச்­சர் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

12 பேருக்குத் தவ­று­த­லா­கக் கொடுக்­கப்­பட்­டு­விட்ட மத்­திய சேமிப்பு நிதி வீட்டு மானி­யத்­தைத் திரும்­பப் பெற வீவக உட­னடி நட­வடிக்­கை­களை எடுத்து இருக்­கிறது என்று நேற்று மன்­றத்­தில் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

தலைமைக் கணக்­குத் தணிக்கை அலு­வ­ல­கம் தெரி­வித்த 13வது விண்­ணப்­ப­தா­ரர் சரி­யாக மதிப்­பிடப்­பட்­ட­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

அந்த அலு­வ­ல­கம் சுட்­டிக்­காட்டி இருக்­கும் மேலும் 1,055 விண்­ணப்­ப­தா­ரர்­க­ளின் தகுதி நிலையைக் கழ­கம் சரி­பார்த்து வரு­கிறது.

இந்­தச் சரி­பார்ப்பு நட­வ­டிக்கை இந்த ஆண்­டுக்­குள் முடி­வ­டை­யும். பிறகு முடி­வு­கள் தெரி­விக்­கப்­படும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

கடந்த 2018 ஏப்­ரல் 1ஆம் தேதி முதல், சென்ற ஆண்டு செப்­டம்­பர் 30ஆம் தேதி வரை குடும்ப மானி­யம் அல்­லது தனி­ந­பர் மானி­யம் கேட்டு விண்­ணப்­பித்த மற்றும் அந்த மானி­யங்­க­ளைப் பெற்ற மறு­விற்­பனை வீடு கொள்­மு­தல்­கா­ரர்­களின் தக­வல்­களை அந்தத் தணிக்கை அலு­வ­ல­கம் பகுத்து ஆராய்ந்­தது. பிறகு தன்­னு­டைய அறிக்­கையை அது வெளி­யிட்­டது.

குடும்ப அல்­லது தனி­ந­பர் மானி­ய­மாக மொத்­தம் $807.77 மில்­லி­யன் கேட்டு 22,627 பேர் விண்­ணப்­பித்து இருந்­தார்­கள்.

அவர்­களில் 1,152 பேர் அந்த மானி­யத்­தைப் பெற தகுதி இல்­லா­மல் இருக்­க­லாம் என்­பதை அந்த அலு­வ­ல­கம் சுட்­டி­யது.

உண்­மை­யான வரு­மா­னம், தனி­யார் சொத்து உடைமை போன்ற தக­வல்­களை வீவ­க­வி­டம் தெரி­விக்கத் தவ­றிய 12 விண்­ணப்­ப­தாரர்­களுக்கு மானி­யம் தவ­றான முறை­யில் கொடுக்­கப்­பட்­டு­விட்­டது என்று நேற்று அமைச்­சர் திரு லீ நாடாளு மன்­றத்­தில் குறிப்­பிட்­டார்.

அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சில்­வியா லிம்­மிற்கு பதி­ல­ளித்து பேசிய அமைச்­சர், அந்த விண்­ணப்­ப­தா­ரர்­க­ளைப் பொறுத்­த­வரை தெரி­விக்­கா­மல் விடு­பட்­டு­விட்ட தக­வல்­கள் பற்றி தனித்­தனி­யாக ஆரா­யப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.

மானி­யம் கேட்டு வரும் ஒவ்­வொரு விண்­ணப்­பத்­தை­யும் அதி­கா­ரி­க­ளைக் கொண்டு வீவக சரி­பார்க்­கிறது.

இந்­தச் சரி­பார்ப்பு நடை­முறை பெரும்­பா­லும் சிக்­க­லா­னது என்று திரு லீ குறிப்­பிட்­டார்.