அப்பாவிகளுக்குப் பாதுகாப்பு தேவை: எம்பி.க்கள் வலியுறுத்து

அப்பாவிகளுக்குப் பாதுகாப்பு தேவை: எம்பி.க்கள் வலியுறுத்து

1 mins read
8ddd03e3-d5d6-46fc-834c-37569b3fdb38
-

பல்­வேறு பாலி­யல் குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­களை அதி­க­ரிக்­கும் புதிய சட்­டங்­களை நேற்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வர­வேற்­ற­னர்.

அதே­வே­ளை­யில், தவறாக அத்­த­கைய குற்­றச்­சாட்டுக­ளுக்கு இலக்­கா­வோ­ருக்கு மேலும் பாது­காப்புத் தேவை என்று அவர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

நாடா­ளு­மன்­றம் நேற்று குற்­ற­வி­யல் சட்­டத்தை (வெவ்­வே­றான திருத்­தங்­கள்) நிறை­வேற்­றி­யது.

அந்­தச் சட்­டத்­தில் குறிப்­பி­டப்­பட்டு இருக்­கும் பல மாற்­றங்­கள் தொடர்­பில் உறுப்­பி­னர்­கள் அக்கறை தெரி­வித்­த­னர்.

பாலி­யல் தொடர்­பான குற்­றம் சுமத்­தப்­படும் ஒரு­வ­ரின் அடை­யா­ளத்தை, அவர் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு, மேல்முறை­யீட்டு வாய்ப்பு இல்லை எனும் நிலை ஏற்­ப­டு­வதற்கு முன்­பாக, வெளி­யிட வேண்­டுமா, வேண்­டாமா என்­பது பற்றி ஆய்வு நடத்த வேண்­டும் என்று நிய­மன உறுப்­பி­னர் ராஜ் ஜோஷ்வா தாமஸ் கோரிக்கை விடுத்­தார்.

புக்­கிட் பாத்­தோக் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முரளி பிள்ளை மருத்­துவ ரீதி­யில் பொருத்­த­மாக இருந்­தால் 50க்கும் மேற்­பட்ட வய­துள்ள ஆண் குற்­ற­வா­ளி­களுக்குப் பிரம்­படி கொடுக்­கப்­பட வேண்­டும் என்று வாதிட்­டார்.

இதற்கு பதி­ல­ளித்த சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மும், அதற்கான வயது வரம்பை அதி­கரிக்க வேண்­டிய தேவை இல்லை என்று தெரி­வித்­தார்.