வெளிச்சத்துக்கு வந்துள்ள மேலும் பல குறைபாடுகள்

வெளிச்சத்துக்கு வந்துள்ள மேலும் பல குறைபாடுகள்

2 mins read
a3a9a99c-103a-4360-8a42-9388a4b4be1f
-

மக்­கள் கழ­கம் நிர்­வ­கிக்­கும் இரண்டு பெரிய மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்­குக் கூடு­த­லாக ஏறத்­தாழ $60,000 செலுத்­தப்­பட்­டி­ருக்­கக்

கூடும் என்று கழ­கம் தன்­னிச்­சை­யாக நடத்­திய புலன்

விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

'அவர் தெம்­ப­னிஸ் ஹப்', 'ஹார்ட்­பிட்@பிடோக்' ஆகிய இரண்டு மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் தொடர்­பான கணக்­குத் தணிக்­கை­யில் குறை­பா­டு­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து, மக்­கள் கழ­கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

'அவர் தெம்­ப­னிஸ் ஹப்'புக்­கான கட்­டு­மா­னப் பொருட்­க­ளுக்­குக் கூடு­த­லாக கிட்­டத்­தட்ட $2 மில்­லி­யன் செலுத்­தப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று தலைமை கணக்­குத் தணிக்கை அதி­காரி அலு­வ­ல­கம் தனது வரு­டாந்­திர கணக்­குத் தணிக்கை அறிக்­கை­யில்

கோடிட்­டுக் காட்­டி­யது.

$5 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான ஒப்­பந்­தங்­க­ளுக்கு முழு விலை ஏற்ற இறக்­கங்­க­ளுக்­கான சரி­செய்­யும் அணு­கு­மு­றையை அர­சாங்க அமைப்­பு­கள் கட்­டா­யம் கடைப்

பிடிக்­க­வேண்­டும் என்று அமைச்­சர் டோங் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். அதன்­படி கட்­டு­மா­னத் திட்­டம் நடை­பெ­றும் கால­கட்­டத்­தில் எஃகு, கான்­கி­ரீட் போன்ற முக்­கி­ய­மான பொருட்­க­ளின் விலை­களில் ஏற்­படும் மாற்­றத்­தைக் கருத்­தில்­கொண்டு கட்­ட­ணம் செலுத்­தும் தொகையை மாற்­ற­வேண்­டும்.

தலை­மைக் கணக்­குத் தணிக்கை அதி­காரி அலு­வ­ல­கம் அறிக்கை வெளி­யிட்­டதை அடுத்து, 31 பொது கட்­ட­மைப்­புத் திட்­டங்­களை மக்­கள் கழ­கம் மறு­ஆய்வு செய்­த­தாக எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங்­கிற்கு அமைச்­சர் டோங் பதி­ல­ளித்­தார்.

இரண்டு கட்­டு­மா­னத் திட்­டங்­களில் ஏழாண்டு கால­கட்­டத்­தில் நிகழ்ந்த விலை ஏற்ற இறக்­கம் 70 விழுக்­காடு மட்­டுமே கருத்­தில் கொள்­ளப்­பட்­டது என அதி­லி­ருந்து தெரி­ய­வந்­த­தாக அவர் தெரி­வித்­தார். இதைப்­போன்றே 'அவர் தெம்­ப­னிஸ் ஹப்'பின் மேம்­பாட்­டுப் பணி­யில் நடந்­த­தாக அவர் கூறி­னார்.

இதை­ய­டுத்து, கட்­டு­மா­னப் பணி ஒப்­பந்­தங்­களில் அனைத்து அம்­சங்­களும் ஒரே மாதி­ரி­யா­க­வும் தெளி­வா­க­வும் இருப்­பதை மக்­கள் கழ­கம் உறுதி செய்­துள்­ள­தாக அவர் கூறி­னார். தலை­மைக் கணக்­குத் தணிக்கை அதி­காரி அலு­வ­ல­கம் சுட்­டிக்­காட்­டி­யுள்ள கட்­டு­மா­னப் பணி­கள் தொடர்­பி­லான 252 குறை­பா­டு­க­ளை­யும் மக்­கள் கழ­கம் ஆராய்ந்­த­தாக திரு டோங் கூறி­னார்.

"ஒப்­பந்­தங்­க­ளின் மற்ற அம்­சங்­கள் தகுந்த ஒப்­பு­த­லு­ட­னும் முறை யான ஆவணப்படுத்துதலுடனும் நிறை­வேற்­றப்­பட்­டனவா எனக் கண்­ட­றிய மக்­கள் கழ­கம் 252 குறை­பா­டு­களை மறு­ஆய்வு செய்து வரு­கிறது. முறை­யான அணு­கு­முறை கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வந்­தால் அவற்­றைச் சரி­செய்­யத் தேவை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்," என்று அமைச்­சர் டோங் தெரி­வித்­தார்.

கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளுக்­கான கட்­ட­ணத்­தைச் செலுத்­து­வ­தில் சீரற்­ற­தன்­மை­யும் ஒப்­பந்­தங்­களை நிர்­வ­கிப்­ப­தில் குறை­பா­டு­களும் ஏற்­பட்­டுள்­ள­தாக தலை­மைக் கணக்­குத் தணிக்கை அதி­காரி அலு­வ­ல­கம் தெரி­வித்ததை மக்­கள் கழ­கம் தன்னிச்சையாக நடத்­திய புலன்­வி­சா­ரணை உறுதி செய்­தி­ருப்­ப­தாக திரு டோங் கூறி­னார்.

தற்­போது நடப்­பில் இருக்­கும் அணு­குமு­றையை வலுப்­ப­டுத்த பணிக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் டோங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரி­வித்­தார்.