'மலேசியாவின் புதிய அரசுடன் ஆக்கபூர்வ உறவு வைத்திருக்க சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது'

'மலேசியாவின் புதிய அரசுடன் ஆக்கபூர்வ உறவு வைத்திருக்க சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது'

2 mins read
940abf89-bf41-48b2-abb6-9e757b06fbe1
-

மலே­சி­யா­வின் புதிய அர­சாங்­கத்

துடன் தொடர்ந்து ஆக்­க­பூர்வ உறவு வைத்­தி­ருக்க சிங்­கப்­பூர் கடப்­பாடு கொண்­டுள்­ள­தாக வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இரு நாடு­க­ளுக்­கும் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் பலன் தரும் வகை­யில் மலே­சி­யத் தலை­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்து, அவர்­க­ளு­டன் ஒத்­து­ழைப்­பதை சிங்­கப்­பூர் தொட­ரும் என்று நாடா­ளு­மன்­றத்­தில் அவர் நேற்று தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் தற்­போ­தைய அர­சி­யல் சூழல், சிங்­கப்­பூர்-மலே­சியா இரு­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வத்­தின் நிலை ஆகி­யவை தொடர்­பாக செம்­ப­வாங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு

விக்­ரம் நாயர், கெபுன் பாரு

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு ஹென்ரி குவெக் ஆகி­யோர் கேட்ட கேள்­வி­க­ளுக்கு டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் பதி­ல­ளித்­தார்.

மலே­சி­யா­வின் முன்­னாள்

பிர­த­மர் முகை­தீன் யாசின் பதவி வில­கி­யதை அடுத்து, கடந்த மாதம் 21ஆம் தேதி­யன்று இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் அப்­ப­த­வியை ஏற்­றார்.

மலே­சி­யாவை யார் ஆட்சி செய்­தா­லும் அவ­ரு­டன் இணைந்து செயல்­ப­டு­வதே சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாடு என்­றார் அமைச்­சர்

விவி­யன் பால­கி­ருஷ்­ணன்.

"இதற்கு முன்பு இருந்த மலே­சிய அர­சாங்­கங்­க­ளு­ட­னும் தலை­வர்­க­ளு­ட­னும் நாம் நல்­லு­றவு கொண்­டி­ருந்­தோம். பல துறை­களில் நாம் அவர்­க­ளு­டன் நன்கு

ஒத்­து­ழைத்து வந்­துள்­ளோம்,"

என்­றார் அமைச்­சர் விவி­யன்

பால­கி­ருஷ்­ணன்.

மலே­சி­யா­வின் பிர­த­ம­ராக திரு இஸ்­மா­யில் பதவி ஏற்ற மறு­நாள், பிர­த­மர் லீ சியன் லூங் அவ­ரு­டன் தொடர்­பு­கொண்டு பேசி­யதை அமைச்­சர் சுட்­டி­னார்.

மலே­சிய அமைச்­சர்­க­ளு­டன் சிங்­கப்­பூர் அமைச்­சர்­கள்

நல்­லு­றவை உறுதி செய்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

திரு இஸ்­மா­யி­லும் அவ­ரது அமைச்­சர்­களும் சிங்­கப்­பூர் தலை­வர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர்­கள் என்­றார் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை நில­வி­வ­ரும் வேளை­யில் இரு

நாடு­க­ளுக்­கி­டையே பல்­வேறு

சிறப்­புப் பயண ஏற்­பா­டு­கள்

நடப்­பில் இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

நிறு­வ­னங்­கள், ஊழி­யர்­கள், இரு­நாட்டு மக்­கள் எதிர்­நோக்­கும் இடை­யூ­று­க­ளைக் குறைக்க இந்த

நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சரக்கு லாரி­கள் பாது­காப்­பாக சென்று வரு­வது, இரு­நா­டு­க­ளுக்­கி­டையே அவ்­வப்­போது பய­ணம் செய்­வது, அவ­ச­ர­நி­லைக்கு வழி­வி­டும் சிறப்பு ஏற்­பா­டு­கள் போன்­றவை இதில் அடங்­கும் என்­றார் அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன்.

சிங்­கப்­பூர்-ஜோகூர் பாரு­வுக்கு இடை­யி­லான விரைவு ரயில்

கட்­ட­மைப்­புக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் அவை திட்­ட­மிட்­ட­படி நடந்து வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

கிரு­மித்­தொற்­று­டன் வாழக்

கூடிய சூழ்­நி­லை­யில் சிங்­கப்­பூர் இருப்­ப­தால் மலே­சி­யா­வு­ட­னான பய­ணத்தை பாது­காப்­பான முறை­யில், படிப்­ப­டி­யாக மீண்­டும் தொடர்­வது குறித்து கலந்­து­ரை­யா­டப்

படு­வ­தாக அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­னார்.