யேல்-என்யுஎஸ் கல்லூரியைப் பல்கலைக்கழகக் கல்விமான்கள் திட்டத்துடன் இணைக்க எடுக்கப்பட்டுள்ள முடிவால் சிங்கப்பூரில்
கல்வித் துறைக்கு இருக்கும் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று எழுந்துள்ள கவலை தேவையற்றது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பத்து ஆண்டு
களுக்கு முன்பு யேல்-என்யுஎஸ் நிறுவப்பட்டபோதும் இத்தகைய கவலைகள் மேலெழுந்ததை அவர் சுட்டினார். அவை தேவையற்றவை என்பது நிரூபணமாகிவிட்டதாக அவர் கூறினார்.
யேல்-என்யுஎஸ் நிறுவப்படுவதற்கு முன்பே சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), மற்ற தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் கலைகள் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் கற்றல், ஆய்வு ஆகியவற்றுக்கான நீண்ட வரலாறு உள்ளதாக
அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறக்கூடிய தலைப்புகளை ஒட்டியும் சில சமயங்களில் கற்றல், ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
யேல்-என்யுஎஸ் கல்லூரி-பல்
கலைக்கழக கல்விமான்கள் திட்ட இணைப்பு சிங்கப்பூர் தேசிய பல்
கலைக்கழகத்தின் துறைகளுக்குஇடையிலான வருங்காலத் திட்டத்தின் ஒரு பகுதி என்றார் அமைச்சர் சான். கலைகள், அறிவியல் துறைகளை இணைத்து மானுடவியல், அறிவியல் கல்லூரி
அமைக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு, சுற்றுப்புறப்
பள்ளியையும் பொறியியல் துறையையும் இணைத்து வடிவமைப்பு, பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. மானுடவியல், அறிவியல் கல்லூரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது.
யேல்-என்யுஎஸ் இணைப்பு குறித்து கடந்த மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் வடிவமைப்பு, பொறியியல் கல்லூரி குறித்தும் அறிவிக்கப்பட்டது.
இணைப்புக்கு யேல்-என்யுஎஸ் கல்லூரிக்கு ஏற்படும் அதிகப்படியான செலவுகளும் ஒரு காரணம் என்றார் திரு சான்.
ஆனால் இது இணைப்புக்கான முக்கிய காரணம் அல்ல என்றார் அவர். இணைப்பு தொடர்பாக
மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி
இருந்தனர். அதற்குப் பதலிளிக்கும் வகையில் நேற்று நாடாளுமன்றத்தில் இத்தகவல்களை அமைச்சர் சான் வெளியிட்டார்.
யேல்-என்யுஎஸ் கல்லூரியைப் பல்கலைக்கழகக் கல்விமான்கள் திட்டத்துடன் இணைக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து மாணவர்கள், பெற்றோர் ஆகியோரிட
மிருந்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. யேல்-என்யுஎஸ் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர் செலுத்தும் கட்டணத்தைவிட
என்யுஎஸ்ஸில் மானுடவியல் அல்லது அறிவியல் துறையில் பயிலும் மாணவர் செலுத்தும் கட்டணம் இரு மடங்குக்கும் அதிகம் என்றார் திரு சான். இணைப்பு தொடர்பான அறிவிப்பைக் கூடிய விரைவில் செய்வது குறித்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் யேல் பல்கலைக்கழகமும் இணைந்து முடிவெடுத்ததாக அமைச்சர் சான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரு பல்கலைக்கழகங்களின் மூத்த தலைவர்களும் இயக்குநர் சபையினரும் இணைந்து முடிவெடுத்ததாகவும் உத்திமுறை, நிதி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாலும் யேல்-என்யுஎஸ் கல்லூரியின் தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கருத்துகள் நாடப்படவில்லை என்றார் அவர்.

