தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்பத்து நினைவுகளை மீண்டும் மலரச் செய்யும் கலைத் திட்டம்

1 mins read
a89a5ae0-30a0-44e8-8672-a805123d4274
மூத்தோருக்குப் பழைய கம்பத்து நினைவுகளைக் கொண்டுவர நடத்தப்படும் 'கலெக்‌ஷன் கேர்ஸ்' கலைத் திட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூத்­தோ­ருக்­குப் பழைய கம்­பத்து நினை­வு­க­ளைக் கொண்­டு­வ­ரும் கலைத் திட்­டம் ஒன்றை தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் நேற்று தொடங்­கி­யது. உள்­ளூர் ஓவி­யர் யிப் யூ சோங்­கின் இரு படைப்­பு­கள் மீண்­டும் வரை­யப்­பட்டு, வண்­ணம் தீட்­டப்­பட்­டு காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த ஓவி­யங்­கள் கம்­பத்தை பகல் நேரத்­தி­லும் இரவு நேரத்­தி­லும் காட்­டு­கின்­றன.

திட்­டத்­தில் பங்­கெ­டுக்­கும் 12 மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் ஓவி­யங்­கள் காட்­சிக்கு வைக்­கப்­படும். ஒவ்­வொரு நிலை­யத்­தி­லும் ஓவி­யங்­கள் இரண்டு வாரங்­க­ளுக்­குக் காட்­சிக்கு வைக்­கப்­படும்.

திட்­டத்­தில் ஏறத்­தாழ 90 பேர் பங்­கெ­டுப்­பர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒவ்­வொரு நிகழ்ச்­சி­யிலும்

நான்­கி­லி­ருந்து எட்டு மூத்த குடி­மக்­கள் பங்­கெ­டுப்­பர். இவை ஸூம் செயலி மூலம் நடத்­தப்­படும். திட்­டத்­தில் பங்­கெ­டுப்­போ­ரி­டம் கலைப்­பொ­ருட்­கள் அறி­மு­கப்

­ப­டுத்தி வைக்­கப்­படும். அது­

மட்­டு­மல்­லாது, கம்­பத்­தில் வாழ்ந்­த­போது அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­கள், நினை­வு­கள் ஆகி­ய­வற்­றப் பகிர்ந்­து­கொள்ள மூத்த குடி­மக்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வர்.