மோசடி: அரசாங்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை, இருவர் இடைநீக்கம்

மோசடி: அரசாங்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை, இருவர் இடைநீக்கம்

1 mins read
1a9c9203-6792-4bb8-95b1-87a64a3b04c6
-

கட்­ட­ணக் கோரிக்­கைப் பதி­வு­களில் மோசடி செய்­ததை ஒப்­புக்­கொண்ட கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­சின் இரண்டு அதி­கா­ரி­க­ளுக்கு அதி­கா­ர­பூர்­வ­மாக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ளது.

மேலும் அவர்­க­ளது செயல்­பாட்டு மதிப்­பீடு பாதிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, போலி விலை மதிப்­பீட்­டை­யும் ஆவ­ணங்­க­ளை­யும் தயா­ரித்த இரண்டு மக்­கள் கழக ஊழி­யர்­கள் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

உள்­துறை அமைச்­சுக்கு வழங்­கப்­பட்ட ஒப்­பந்­த­தா­ரர் பதி­வில் குறை­பா­டு­கள் கண்டு ­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, ஒப்­பந்­த­தா­ரர் ஒரு­வர் மீது குற்­றச்­சாட்டு பதி­வா­கி­யுள்­ளது.

மற்­றொ­ரு­வ­ருக்கு 12 மாத நிபந்­த­னை­யு­ட­னான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

கவ­னக்­கு­றை­வு­டன் செயல்­பட்ட இரண்டு அதி­கா­ரி­க­ளி­டம் உள்­துறை அமைச்சு விசா­ரணை நடத்தி வரு­வ­தாக நிதி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கல்வி அமைச்­சி­லும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தி­லும் இது­போன்ற விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.