மோசடி செய்து மானியம் பெற்ற பெண்ணுக்குச் சிறை

மோசடி செய்து மானியம் பெற்ற பெண்ணுக்குச் சிறை

2 mins read
6f8fcc4c-6d6a-4b18-9878-2ebd7e29e00a
-

போலி ஆட்­கு­றைப்­புக் கடி­தத்­தின் மூலம் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சை ஏமாற்றி, கொவிட்-19 ஆத­ரவு மானி­ய­மாக $4,000 பெற்ற பெண்­ணுக்கு ஏழு மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பெருந்­தொற்­றுக் காலத்­தில் வேலை இழந்­தோர்க்கு உத­வு­வ­தற்­காக அந்த மானி­யம் அறி­விக்­கப்­பட்­டது.

டியோங் ஷி லின், 32, என்ற அப்­பெண், தமது கொவிட்-19 ஆத­ரவு மானிய விண்­ணப்­பத்­தில் அந்தப் போலி ஆட்­கு­றைப்­புக் கடி­தத்­தின் படத்தை இணைத்து அனுப்­பி­யி­ருந்­தார்.

தமது நிறு­வ­னம் தமக்கு வழங்­கிய மடிக்­க­ணி­னி­யில் ஏற்­பட்ட பிரச்­சி­னை­யைச் சரி­செய்­வ­தற்­காக அதைச் சக ஊழி­ய­ரி­டம் கடந்த நவம்­பர் மாதம் ஒப்­ப­டைத்­த­போது, டியோங்­கின் மோசடி வெளிச்­சத்­திற்கு வந்­தது.

தன்­மீ­தான இரண்டு ஏமாற்­றுக் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் ஒரு மோச­டிக் குற்­றச்­சாட்­டை­யும் டியோங் ஒப்­புக்­கொண்­டார்.

2019 அக்­டோ­பர் முதல் 2020 பிப்­ர­வ­ரி­வரை 'டிவி­எச் சிங்­கப்­பூர்' என்ற நிறு­வ­னத்­தில் டியோங் வேலை செய்­தார். பின்­னர் 2020 ஏப்­ர­லில் 'அஷூ­ரன்ஸ் சிங்­கப்­பூர்' என்ற நிறு­வ­னத்­தில் பணிக்­குச் சேர்ந்­தார்.

இந்­நி­லை­யில், கடந்த ஆண்டு ஏப்­ரல்-மே கால­கட்­டத்­தில், சமு­தாய, குடும்ப அமைச்சை ஏமாற்றி, கொவிட்-19 ஆத­ரவு மானி­யம் பெற ஒரு மோச­டித் திட்­டத்தை வகுத்­தார். அதன்­படி, 2020 பிப்­ர­வரி 2ஆம் தேதி­யில் இருந்து தாம் வேலை­யின்றி இருப்­ப­தாக அவர் விண்­ணப்­பித்­தார்.

போதிய சான்­றா­வ­ணங்­கள் இல்­லா­த­தால் முத­லில் அவ­ரது விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து, 'டிவி­எச்' நிறு­வனத்­தின் ஆட்­கு­றைப்­புக் கடி­தத்­தைப் பட­மெ­டுத்து அனுப்­பி­யதை அடுத்து, அவ­ருக்கு $2,400 மானி­யம் வழங்­கப்­பட்­டது.

பின்­னர் 'அஷூ­ரன்ஸ்' நிறு­வனத்­தில் இருந்­தும் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­தாக ஒரு போலிக் கடி­தத்­தைத் தயார்­செய்து, அதன்­மூ­ல­மா­க­வும் டியோங் $1,600 மானி­யம் பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.