சிங்கப்பூரில் நேற்று முன்தினம் 520 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது என்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. சமூக அளவில் 454 பேர்க்கும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 63 பேர்க்கும் தொற்று உறுதியானது. உள்ளூரில் தொற்றுக்காளான 520 பேரில் 137 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்த மூவர்க்கும் தொற்று உறுதியானது. இந்நிலையில், மருத்துவமனைகளில் தற்போது 780 பேர் கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 54 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப் படுகிறது. அவர்களில் 44 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எழுவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
உள்ளூரில் மேலும் 520 பேர் பாதிப்பு
1 mins read
-

