ஹோட்டல் 81 அறை ஒன்றில் 40 வயது யாஸ்லீ ருஸ்டி எரிந்துகொண்டிருந்த சிகரெட்டைக் கட்டிலில் வைத்துவிட்டு சென்றார். இதனால் மூண்ட தீ, $7,000க்கு மேற்பட்ட சேதத்தை ஏற்படுத்தியது.
ஹோட்டலின் விருந்தினர் ஒருவரும் ஊழியர் ஒருவரும் புகையைச் சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீ மூட்டிய காரணத்துக்கும் போதைப் பொருளை வைத்திருந்ததற்கும், நுகர்ந்ததற்கும் சிங்கப்பூரரான யாஸ்லீக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கண்மூடித்தனமாகத் தீ முட்டியதற்கு அவருக்கு 18 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம். போதைப்பொருள் வைத்திருந்ததற்கும் நுகர்ந்ததற்கும் 10 ஆண்டு கால சிறைத்தண்டனையும் $20,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

