முன்னாள் மனைவியை எட்டு முறை கத்தியால் குத்தியவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

முன்னாள் மனைவியை எட்டு முறை கத்தியால் குத்தியவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

2 mins read
89cd295c-d9d7-4544-a3d8-98e52f2ae09f
-

2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி தமது முன்னாள் மனைவி, 52 வயது திருவாட்டி லோ ஹுவீ ஜியோக்கைக் கத்தியால் எட்டு முறை குத்தியவர் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது.

ஓய்வுபெற்றவரான சீட் செர் ஹங், 69, அங் மோ கியோ ஐடிஇ கார் நிறுத்தப் பூங்காவில் அந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். பின்னர் அதே கத்தியால் தன்னைத்தானே 13 முறை குத்திக்கொண்டு, முன்னாள் மனைவிமீதே சரிந்து விழுந்தார்.சீட்மீது முன்னதாக 300ஏ பிரிவின்கிழ் குற்றம்சாட்டப்பட்டது. அதன்படி அவருக்குக் கட்டாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக்கூடும். சென்ற மாதம் அது 300சி ஆக மாற்றப்பட்டது. அதன்கீழ் மரண தண்டனையோ ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம்.

ஆயுள் தண்டணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்த எண்ணமும் இல்லை என்று அரசுத்தரப்பினர் கூறினர்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சீட் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகவும் அதற்கு எந்த ஆதாரங்களும் வழங்க விரும்பவில்லை என்றும் சீட் அமைதியாகத் தெரிவித்தார். ஐடிஇ தலைமையகத்திலிருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தார்.

தேர்வுப் பிரிவின் இயக்குநராகப் பணிபுரிந்துகொண்டிருந்த திருவாட்டி லோவுக்கும் சீட்டுக்கும் 2011ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கப்பட்டது. அதனை அடுத்து சொத்துகள் நியாயமான முறையில் பிரிக்கப்பட்டவில்லை என்று சீட் கருதினார்.

வாகனம் நிறுத்தும் இடத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாகக் திருவாட்டி லோவுக்காக சீட் காத்திருந்தார்.சீட்டால் தாக்கப்பட்டத் திருவாட்டி லோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சீட்டுக்கு, வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களுக்காக அறுவை சிக்ச்சை செய்யப்பட்டது.

தம் மகளையும் அன்பிற்குரியவர்களையும் கருத்தில் கொண்டு குற்றங்களை ஒப்புக்கொள்ள சீட் முன்வந்துள்ளதாக சீட்டின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

குற்றம் புரிந்தபோது சீட்டிற்குக் மனநோய் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.