சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த பிரதமர் லீ

பிர­த­மர் லீ சியன் லூங், சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்த சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யியை நேற்று இஸ்­தானா மாளி­கை­க்கு வர­வேற்­றார்.

சிங்கப்பூர், சீனாவுக்கு இடையிலான நீண்டகால உறவை இரு தலை­வர்­களும் மறு­வு­றுப்­ப­டுத்­திக்­கொண்­ட­னர்.அனைத்­து­லக, வட்­டார அள­வி­லான விவ­கா­ரங்­க­ளைப் பற்றி ஆக்­க­க­ர­மாக, ஒளிவுமறை­வின்றி இரு­வ­ரும் பேசிக்­கொண்­ட­தா­கத் திரு லீ ஃபேஸ்புக் பதி­வில் கூறி­னார். கொள்ளைநோய்ப் பர­வ­லால் உல­க­ள­வில் நில­வ­ரம் சவால்­மிக்கதாக உள்­ளது.

இருந்­தா­லும் கிரு­மிப் பர­வலை இன்­னும் நன்­றா­கக் கையாள வளங்­க­ளை­யும் திறன்­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்ள இருதரப்­பும் இணைந்து செயல்­பட்­ட­தாக அவர் பதி­வில் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ருக்கு இரண்டு நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்ட திரு வாங், துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் ஆகி­யோ­ரை­யும் சந்­தித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!