ஓட்டுநர்களின் பாதுகாப்பை மேம்படுத்த ஆலோசனை

ஓட்டுநர்களின் பாதுகாப்பை மேம்படுத்த ஆலோசனை

1 mins read
629792ed-ff4e-444b-9317-163314300098
-

விநி­யோ­கச் சேவை ஓட்­டு­நர்­கள், தனி­யார் வாடகை வாகன ஓட்­டு­நர்­கள், டாக்சி ஓட்­டு­நர்­கள் ஆகி­யோ­ரின் பாது­காப்பை வலுப்­ப­டுத்து­வது குறித்து ஆய்வு மேற்­கொள்ளப்­படும் என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் தெரி­வித்­துள்­ளார்.

செய­லி­கள் போன்ற தளங்­களின்­வழி சேவை­களை வழங்­கும் ஊழி­யர்­களுக்­கான ஆலோ­ச­னைக் குழு ஆய்வை நடத்­தும்.

அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்­கும் அவர்­க­ளு­டன் இணைந்து வேலை செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடையே உள்ள உறவு மேலும் சம­நி­லை­யில் இருப்­பதை உறு­தி­செய்­வது, வேலை­யி­டத்­தில் ஊழி­யர்­களுக்கு காயம் ஏற்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காப்­பது வழங்­கு­வது போன்ற அம்­சங்கள் குறித்து ஆய்வு நடத்­தப்­படும் என்று அவர் கூறி­னார். நிறு­வ­னங்­க­ளு­டன் ஒப்­பந்­த­மின்றி விருப்­பு­ரிமை அடிப்­ப­டை­யில் இயங்­கும் ஊழி­யர்­க­ளுக்­கான பாது­காப்­பின் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எழுப்­பிய கேள்­வி­களுக்கு டாக்­டர் கோ பதி­ல­ளித்­தார். விநி­யோக ஓட்­டு­நர்­க­ளுக்கு கூடு­தல் பாது­காப்பு வழங்­கு­வது குறித்து மனி­த­வள அமைச்சு ஆய்வு நடத்­தும் என்று தேசிய தினக் கூட்ட உரை­யில் பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யி­ருந்­தார்.

கிராப், டிலி­வரூ போன்­ற­ தளங்களுடன் வேலை செய்­யும் ஓட்டுநர்கள் போன்றோருக்கு ஒப்­பந்­தங்­கள் இல்லா­த­தால் இவர்களுக்கு அடிப்­படை வேலை பாது­காப்பு இல்லை எனத் திரு லீ சுட்­டி­னார்.

விநி­யோக ஓட்­டு­நர்­கள், தனி­யார் வாடகை வாகன ஓட்­டு­நர்­கள் உட்­பட சென்ற ஆண்டு சுமார் 79,000 பேர் இத்­த­கைய வேலை­களின் மூலம் முக்­கிய வரு­மா­னத்தை ஈட்டி­ய­தாக டாக்­டர் கோ சொன்­னார்.