'வேலையிடப் பாரபட்சத்தை கையாள சமரச பேச்சுவார்த்தை தேவை'

'வேலையிடப் பாரபட்சத்தை கையாள சமரச பேச்சுவார்த்தை தேவை'

1 mins read
bfe22d09-3c99-41c2-8fee-211e0afec699
-

பல சம­யங்­களில், வேலை­யி­டங்­களில் பார­பட்­சம் காட்­டப்­ப­டுவதாகச் சொல்­லப்­படும் சம்­ப­வங்­க­ளுக்கு ஆதா­ரம் இருக்­காது.

பெரும்­பா­லான வேளை­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் விவ­கா­ரத்­தைக் கைவிட்­டு­வி­டு­கின்­ற­னர் என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் நாடாளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

வேலை­யி­டப் பார­பட்­சத்­தைச் சமா­ளிக்க சம­ர­சப் பேச்­சு­வார்த்தையை முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யா­க­வும் தேவை­யான ஒன்­றா­க­வும் அர­சாங்­கம் தொடர்ந்து வலி­யு­றுத்­தும் என்­று அவர் குறிப்­பிட்­டார். நியாயமான வேலை­வாய்ப்பு நடை­மு­றை­கள் மீதான முத்­த­ரப்பு வழி­காட்­டு­தல்­க­ளின்கீழ் அமைந்­துள்ள வழி­மு­றை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு வேலை­யி­டப் பார­பட்­சத்­திற்கு எதி­ரான சட்­டங்­கள் வரையப்படும் எனப் பிர­த­மர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் கூறி­யிருந்தார்.

பாலி­னம், வயது, இனம், மதம், உடற்­குறை போன்ற அம்­சங்­க­ளின் தொடர்­பில் நிக­ழும் வேலை­யி­டப் பார­பட்ச சம்­ப­வங்­க­ளைக் கையாள தீர்ப்­பா­யம் அமைக்­கப்­படும் என்­றும் தேசிய தினக் கூட்ட உரையில் அறிவிக்கப்பட்டது.