'குறைந்தபட்ச சம்பளத்தை $1,400க்கு மேல் உயர்த்த திட்டமில்லை'

'குறைந்தபட்ச சம்பளத்தை $1,400க்கு மேல் உயர்த்த திட்டமில்லை'

1 mins read
2f6908eb-73e9-4be0-8af0-17ec8b231e49
-

சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் தர­வேண்­டிய குறைந்­த­பட்ச சம்­ப­ளத்தை 1,400 வெள்­ளிக்கு மேல் உயர்த்­தும் எண்­ணம் தற்­போதைக்கு இல்லை என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது கூறி­யுள்­ளார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­கும் நிறு­வ­னங்­கள் அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் முதல் உள்­ளூர் ஊழி­யர்­களுக்கு குறைந்­த­பட்­ச­மாக இந்­தத் தொகையை வழங்­க­வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு சென்ற மாதம் அறி­வித்­தது. இதன் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு திரு ஸாக்கி பதி­ல­ளித்­தார்.