கேடிவி கேளிக்கைக் கூடங்கள் இனி கொவிட்-19 கிருமி பரவும் குழுமம் இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுமத்தில் மோத்தம் 253 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
சென்ற வாரம் புதன்கிழமையன்று மூடப்பட்ட இந்தக் குழுமத்தில் கடந்த சுமார் 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கிருமித்தோற்று ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதியன்று கேடிவி குழுமம் முதலில் தெரியவந்தது.
அதற்குப் பிறகு ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் பெரிய கிருமிப் பரவல் குழுமமாக உரு வெடுத்தது.

