எஸ்பிளனேட் மொத்த வருமானம் $12 மில்லியன் சரிந்தது

எஸ்­பி­ள­னேட் அரங்­கின் மொத்த வரு­மா­னம் கடந்த நிதி­யாண்­டில் 12 மில்­லி­யன் வெள்ளிக்குச் சரிந்­ததாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழல் காரணமாக கலைத் துறை பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­தால் சென்ற ஆண்டு ஏப்­ரல் மாதம் முதல் இவ்­வாண்டு மார்ச் மாதம் வரை அரங்­கம் பெரும் இழப்பை எதிர்­கொண்­டது.

கடந்த நிதி­யாண்­டில் அரங்­கிற்­குக் கிடைத்த ஆத­ரவு மற்­றும் நன்­கொ­டை­யின் மதிப்பு 4.3 மில்­லி­யன் வெள்­ளி­யா­கக் குறைந்­தது. அதற்கு முந்­தைய நிதி­யாண்­டில் தொகை 5.4 மில்­லி­யன் வெள்­ளி­யா­கப் பதிவா­னது. இதை­விட அரங்­கின் வாடகை வரு­மா­னம் அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­டது. வாடகை வரு­மா­னம் 7.08 மில்­லி­யன் வெள்­ளி­யி­லி­ருந்து 3.8 மில்­லி­யன் வெள்­ளி­யா­கக் குறைந்­தது. பார்­வை­யா­ளர்­கள் நேரில் சென்று காணும் நிகழ்ச்­சி­கள் பல ரத்து செய்­யப்­பட்­ட­தால் அவற்­றி­லி­ருந்து வரும் வரு­மா­னம் 4.4 மில்­லி­யன் வெள்­ளி­யி­லி­ருந்து 756,000 வெள்­ளிக்­குச் சரிந்­தது.

நிகழ்ச்சி நுழை­வுச்­சீட்டு விற்­பனை­யி­லி­ருந்து வந்த தொகை பத்­தில் ஒரு பங்­கிற்­கும் கீழ் வீழ்ச்சி கண்­டது. இப்­புள்ளி விவ­ரங்­கள் கொவிட்-19 சூழ­லால் சிங்­கப்­பூர் கலைத் துறைக்கு ஏற்­பட்ட பாதிப்பை முழு­மை­யாக எடுத்­துக்­காட்­டு­கின்றன. சென்ற ஆண்டு ஏப்­ரல், ஜூன் மாதங்­க­ளுக்கு இடைப்­பட்ட காலத்­தில் சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிருமிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஆகக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­தன. அந்­தக் கால­கட்­டத்­தில் எஸ்­பி­ள­னேட் அரங்­கில் எவ்­வித நட­வ­டிக்­கை­யும் இடம்­பெ­ற­வில்லை. அதன் 19 ஆண்டு கால வர­லாற்­றில் இவ்­வாறு நிகழ்ந்­தது இதுவே முதல் முறை.

ஆண்­டு­தோ­றும் வெளி­யி­டப்­படும் அறிக்­கை­யில் இந்­தப் புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­பட்­டன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!