மின்னூட்டப்படும் நேரத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் கைபேசிகளும் தீப்பிடித்துக்கொள்ளாமல் இருக்க புதிய தொழில்நுட்ப முறை ஒன்று உதவக்கூடும். 'ஷோர்ட் சர்க்கிட்' எனப்படும் செல்லக்கூடாத வழியே மின்சாரம் சென்றால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்க வகைசெய்யும் மின்கலன் பாகத்தை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லித்தியம்-ஐயோன் மின்கலன்களுக்காக இந்தப் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின்கலன் கைபேசிகள், மடிக்கணிகள், மின் வாகனங்கள், விமானங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
'சென்ற ஆண்டு 42 தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் 26 மின் சைக்கிள்களும் தீப்பிடித்துக்கொண்டதைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்பு உருவெடுத்துள்ளது. பேராசிரியர் சூ ஷிச்சுவானும் அவரது குழுவினரும் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

