பாலியல் வன்கொடுமை ஆகக் கொடூரமான குற்றம்: அதிபர்

சிறு­மி­க­ளைப் பாலி­யல் வன்­கொடுமை செய்­யும் குற்­ற­வா­ளி­களைப் பற்றி படிக்­கும்­போது தமக்குப் பல அசௌகரியங்கள் ஏற்படும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்டுள்­ளார். வீடு என்­பது பாது­காப்­பான இடம் என்­றும் அங்கு பாது­காப்­பற்ற சிறு­மி­கள் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­ப­டு­வதையும் அவர் குறிப்­பிட்­டார்.

வீட்­டுச் சூழ­லில் பாலி­யல் குற்றங்­கள் புரி­ப­வர்­க­ளுக்­கான சிறை தண்­ட­னைக் காலம் நீட்டப்­பட்­டி­ருந்­தா­லும் இன்­னும் அதி­க­மான நட­வடிக்­கை­கள் அவ­சி­யம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பாலி­யல் வன்­கொ­டுமை மிக­வும் கொடூ­ர­மான குற்­றம் என்­றும் அதன் விளை­வு­கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை வாழ்­நாள் முழு­வ­தும் பின்­தொ­டரக்­கூ­டும் என்­றும் அதி­பர் கூறி­னார்.

ஆனால், குற்­ற­வா­ளி­களோ தங்­க­ளது தண்டனைக் காலம் முடிந்த பின் சுதந்­தி­ர­மாக வெளியே வந்­து­வி­டு­கி­றார்­கள்.

மேலும் 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளாக இருந்­தால் பிரம்­ப­டித் தண்­டனை கூட விதிக்­கப்­ப­டாது என்­றும் அவர் கூறி­னார்.

இந்த வயது வரம்பு 1900களில் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­ட­தா­க­வும் அக்­கா­லக்­கட்­டத்­தில் சரா­சரி ஆண்­களு­டைய ஆயுள் காலம் 47ஆக இருந்­த­தா­க­வும் திங்­கட்­கி­ழமை அன்று சுகா­தார       நாடா­ளு­மன்­றத்­தில் குறிப்­பிட்­டார்.

அதே தினம், பல பாலி­யல் குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­க­ளைக் கடு­மை­யாக்­கும் வகை­யில் புதிய சட்­டத் திருத்­தம் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

இது குறிப்­பாக 14 வய­தி­லி­ருந்து 18 வயது வரை­யான சிறார்­க­ளு­டன் பாலி­யல் நட­வ­டிக்கை­களில் ஈடு­படு­வோ­ருக்­கும் அவர்­க­ளி­டம் பாலியல் தொடர்­பான படங்­க­ளைக் காண்­பிப்­போ­ருக்­கும் பொருந்­தும்.

குற்­ற­வி­யல் சட்­டத்­தில் இதற்­கான சிறை தண்­ட­னைக் காலம் ஓராண்டு காலத்­தி­லி­ருந்து ஈராண்டு கால­மாக உய­ரும். இருப்­பி­னும், பாலி­யல் வன்­கொ­டு­மை­க­ளைப் பற்றி புகார் செய்யப்­பட்­டால்­தான் சட்­டத்­தால் தலை­யிட முடி­யும் என்று அதி­பர் விளக்­கி­னார்.

மேலும் வீட்­டுச் சூழ­லில் நடக்கும் பாலி­யல் கொடு­மை­களுக்கு எதி­ராக தற்­போது இருக்கும் திட்­டங்­கள் எவ்­வ­ளவு பய­னுள்­ளவை என்­பது தமக்­குத் தெரி­ய­வில்லை என்­றும் அவர் பதி­விட்­டார்.

சிறார்­க­ளைப் பாலி­யல் கொடுமை செய்த மூன்று குற்­ற­வா­ளி­க­ளுக்கு இவ்­வாண்டு தீர்ப்­பளிக்­கப்­பட்­டதை அடுத்து இந்த சட்­டத் திருத்­தம், கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இம்­மூன்­றில் இரண்டு சம்­ப­வங்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் நடந்­த­தைப் பற்றி புகார் செய்­த­தா­லேயே வெளிச்­சத்துக்கு வந்­த­தாக அதி­பர் குறிப்­பிட்­டார்.

முதல் சம்­ப­வத்­தில் தமது மகளின் தோழியை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­வ­ரைப் பற்றி பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் குடும்­பத்­தி­னர் புகா­ர­ளித்­ததை அதி­பர் குறிப்­பிட்­டார். இரண்­டா­வது சம்­ப­வத்­தில் சிறு­மி­யின் பாலி­யல் வன்­கொ­டு­மையைக் கண்­ணுற்ற சகோ­த­ரன் அதை குடும்­பத்­தி­ன­ரி­டம் தெரி­வித்­ததையும் அதி­பர் குறிப்­பிட்­டார்.

தங்­க­ளுக்கு இழைக்­கப்­ப­டு­வ­தைப் பற்றி புரிந்­து­கொள்ள முடி­யா­மல் குழப்­பத்­தில் இருக்­கும் சிறு­மி­க­ளைத் தங்­கள் பிடிக்­குள் வைத்துக்­கொள்ள பயம், அவ­மானம், அச்­சு­றுத்­தல், குடும்ப பந்­தங்­கள் போன்ற உத்­தி­க­ளைப் குற்­ற­வா­ளி­கள் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்­றும் அதி­பர் தெரி­வித்­தார்.

தங்­க­ளுக்­குச் சங்­க­டம் ஏற்­படுத்தும் நடவடிக்கைகளைப் ­பற்றி மற்­ற­வர்­க­ளி­டம் தைரி­ய­மா­கப் பேசவும், அது குறித்து எங்கு உதவி பெற­லாம் என்­ப­தைப்­பற்றி அவர்­கள் அறிந்­தி­ருக்கவும் வேண்­டும் என்­று அவர் கூறி­னார்.தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்ள விரும்­பு­வ­தற்கு யாரா­லும் அவர்­களைக் குற்­றம் சொல்ல முடி­யாது என்­பதை பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அறிந்­தி­ருக்க வேண்டும் என்­றும் அவர் விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!