'டிஓசி' உரிமம் தற்காலிக ரத்து

'டிஓசி' உரிமம் தற்காலிக ரத்து

2 mins read
5dea0cc0-c69d-4f5c-97a0-e29612d19c3d
-

'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' (டிஓசி) எனும் சமூக அர­சி­யல் இணை­யத் தளத்­தின் உரி­மத்தை தக­வல் தொடர்பு, ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் (ஐஎம்­டிஏ) தற்­கா­லி­க­மாக ரத்து செய்­துள்­ளது.

இதன் மூலம், அது இப்­போதைக்கு அதன் இணை­யத் தளம், மற்­றும் சமூக ஊட­கத் தளங்­களை செயல்­ப­டுத்த முடி­யாது என்று ஐஎம்­டிஏ நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

டிஓசி தனக்­குக் கிடைக்­கும் நிதி தொடர்­பான அனைத்து விவரங்­க­ளைத் தொடர்ந்து தெரிவிக்க தவறியதால், இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தாக ஐஎம்­டிஏ கூறி­யது.

அதன்­படி நாளை வியா­ழக்­கிழமை பிற்­ப­கல் 3 மணிக்­குப் பிறகு டிஓசி, தனது இணை­யத் தளம், மற்­றும் சமூக ஊட­கத் தளங்­களில் எவ்­வித பதி­வு­க­ளை­யும் பதி­வேற்றம் செய்ய முடி­யாது.

ஐஎம்­டிஏ விதி­மு­றை­களை டிஓசி தொடர்ந்து மீறி­னால், இம்­மா­தம் 28ஆம் தேதி­யன்று அதன் உரி­மம் நிரந்­த­ர­மாக ரத்து செய்­யப்­படும் என்­றும் ஐஎம்­டிஏ விவ­ரித்­தது.

தற்­போது பதிவு செய்­யப்­பட்ட இரு இணை­யத் தளங்­களில் ஒன்று டிஓசி. மற்­றொன்று தி என்­டி­பென்­டண்ட் சிங்­கப்­பூர் எனும் இணை­யத் தளம். சிங்­கப்­பூ­ரின் கட்சி அர­சி­யல் விவ­கா­ரங்­கள் பற்றி கருத்­து­கள் வெளி­யிட்டு, அதன் மூலம் கலந்­து­ரை­யா­டலை ஊக்­கு­விக்­கும் இணை­யத் தளங்­கள் தங்­கள் நிதி தொடர்­பான அனைத்து தக­வல்­களை­யும் ஐஎம்­டிஏ-விடம் தெரி­விக்க வேண்­டும்.

"இதன் மூலம் வெளி­நாட்­டுச் சக்­தி­க­ளின் கட்­டுப்­பாட்­டில் அத்­தகைய தளங்­கள் செல்­வ­தைத் தவிர்க்க முடி­யும். உள்­நாட்டு அர­சி­ய­லில் வெளி­நாட்­டுச் சக்­தி­க­ளின் தாக்­கம் இருக்­கக்­கூ­டாது என்­ப­தில் அர­சாங்­கம் மிக­வும் கவ­ன­மாக உள்­ளது," என்றும் ஐஎம்­டிஏ விளக்­கி­யது. "மேலும் ஐஎம்­டிஏ-யின் சட்­ட­பூர்வ கடப்­பா­டு­களுக்கு இணைக்க விருப்­ப­மில்லை என்று டிஓசி கூறி­யுள்­ளது," என்று தெரி­வித்த ஐஎம்­டிஏ, நேற்­றைக்­குள் அதன் கார­ணத்­தைத் தெரி­விக்க இறுதி கெடு கொடுத்­தி­ருந்­தது.இதன் தொடர்­பான விவ­காரத்தை தான் சட்­ட­பூர்­வ­மா­கச் சந்­திக்க தயார் என்றும் டிஓசி தெரி­வித்­துள்­ளது.