முன்னாள் மனைவியை 8 முறை கத்தியால் குத்தியவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

2 mins read
1db1fc96-ed2f-4402-b5b7-52f4e2f6719e
கத்திக்குத்துச் சம்பவம் நடந்த தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் (ஐடிஇ) அங் மோ கியோ வளாக வாகன நிறுத்­து­மி­டம். கோப்புப்படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்முன்னாள் கணவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதிரு­வாட்டி லோ ஹ்வீ ஜியோக் -
multi-img1 of 2

2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி தமது முன்­னாள் மனைவி, 52 வயது திரு­வாட்டி லோ ஹ்வீ ஜியோக்­கைக் கத்­தி­யால் எட்டு முறை குத்­தி­ய­வர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த கொலைக் குற்­றச்­சாட்டு நேற்று குறைக்­கப்­பட்­டது.

69 வய­தான ஓய்­வு­பெற்ற சீட் சியர் ஹங், திரு­வாட்டி லோவைத் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் (ஐடிஇ) அங் மோ கியோ வளாக வாகன நிறுத்­து­மி­டத்­தில் தாக்­கப் பயன்­ப­டுத்­தி­ய கத்­தி­யால் தம்மை தாமே 13 முறை குத்­திக்­கொண்­டார்.

சீட் ­மீது முன்­ன­தாக 300ஏ பிரி­வின் ­கிழ் குற்­றம்­சாட்­டப்­பட்­டது.அதன்படி அவருக்குக் கட்­டா­ய­மாக மரண தண்­டனை விதிக்க பட்டிருக்கக்கூடும். சென்ற மாதம் அது 300சி ஆக மாற்­றப்­பட்­டது. இதன் கீழ் மரண தண்­ட­னையோ ஆயுள் தண்­ட­னையோ விதிக்­கப்­ப­ட­லாம்.

நேற்று அர­சுத்­த­ரப்­பி­னர் ஆயுள் தண்­ட­ணைக்கு எதிர்ப்பு தெரி­விக்க எந்த எண்­ண­மும் இல்லை என்று கூறி­னர்.

தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு சீட் எந்த எதிர்ப்­பும் தெரி­விக்­க­வில்லை. அவர் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள விரும்­பு­வ­தா­க­வும் அதற்கு எந்த ஆதா­ரங்­களும் வழங்க விரும்­ப­வில்லை என்­றும் சீட் அமை­தி­யா­கத் தெரி­வித்­தார். ஐடிஇ தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து ஓய்வு பெற்­றி­ருந்­தார் சீட்.

தேர்வு பிரி­வின் இயக்­கு­ந­ரா­கப் பணி­பு­ரிந்து கொண்­டி­ருந்த திரு­வாட்டி லோவுக்­கும் சீட்­டுக்­கும் 2011ஆம் ஆண்டு விவா­க­ரத்து வழங்­கப்­பட்­டது. அதனை அடுத்து சொத்­து­கள் நியா­ய­மான முறை­யில் பிரிக்­கப்­ப­ட­வில்லை என்று சீட் கரு­தி­னார்.

வாக­னம் நிறுத்­தும் இடத்­தில் சுமார் மூன்று மணி நேர­மா­கக் திரு­வாட்டி லோவுக்­காக சீட் காத்­தி­ருந்­தார். சீட்­டால் தாக்­கப்­பட்­டத் திரு­வாட்டி லோ சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார்.

மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்ட சீட்­டுக்கு, வயிற்­றுப் பகு­தி­யில் ஏற்­பட்ட காயங்­க­ளுக்­காக அறுவை சிக்ச்சை செய்­யப்­பட்­டது.

தமது மக­ளை­யும் அன்­பிற்­கு­றி­ய­வர்­க­ளை­யும் கருத்­தில் கொண்டு குற்­றங்­களை ஒப்­புக்­கொள்ள சீட் முன்­வந்­துள்­ள­தாக சீட்­டின் வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

குற்­றம் புரிந்தபோது சீட்­டிற்­குக் மன­நோய் எது­வும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.