$9.7 மில்லியன் மோசடி: 12 பேர் மீது குற்றச்சாட்டு

$9.7 மில்லியன் மோசடி: 12 பேர் மீது குற்றச்சாட்டு

3 mins read
601ec9cb-a3ec-4f48-a482-470f0379cebc
-

மோச­டிச் சம்­ப­வங்­கள் தொடர்­பாக 12 பேர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது. அவர்­கள் $9.7 மில்­லி­யன் தொகை தொடர்­பான மோச­டிச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மோச­டிச் சம்­ப­வத்­தில் தொடர்­புள்ள நான்கு பேர், சம்­ப­வம் நிகழ்ந்த காலக்­கட்­டத்­தில் தனி­யார் கட்­டு­மான நிறு­வ­ன­மான சிவில்டெக் என்­னும் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிந்து வந்­த­னர்.

அவர்­களில் ஓங் காக் பெங், 41, கான் காக் லியோங், 43 ஆகி­யோர் அந்­நி­று­வ­னத்­தின் திட்ட இயக்­கு­நர்­க­ளா­கப் பணி­யாற்றி வந்­த­னர். டான் சென் சுவான், 39, நிறு­வன குழு­மத்­தின் நிதி மேலா­ள­ரா­க­வும் லியாவ் லீ மெங், 55 என்­ப­வர் திட்ட மேலா­ள­ரா­க­வும் பணி­யாற்றி வந்­தனர்.

ஐந்­தா­ம­வரான போங் சைக் கிங், 43, இன்­னொரு கட்­டு­மான பொறி­யி­யல் நிறு­வ­ன­மான குளோ­பல் சிவில் என்­ஜி­னி­ய­ரிங் என்­னும் நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரா­வார்.

இவர்­கள் ஐந்து பேரும் சேர்ந்து, துணை ஒப்­பந்­த­தா­ரர்­கள் மூலம் செய்து முடிக்­கப்­ப­டாத பணி­க­ளுக்­காக சிவில் டெக் நிறு­வ­னத்­தி­டம் பணம் கேட்டு விண்­ணப்­பித்­துள்ளனர்.

இந்­தத் தக­வலை லஞ்ச ஊழல் புல­னாய்­வுப்­பி­ரிவு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

இந்த மோச­டிச் சம்­ப­வம் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மற்­றும் ஆகஸ்ட் மாதங்­க­ளுக்கு இடை­யில் நடந்­த­தாக அந்த அறிக்கை கூறி­யது.

மோச­டிச் சம்­ப­வங்­களில் தொடர்­புள்­ள­தா­கக் கூறப்­படும் மேற்­கண்ட ஐவ­ரும் தலா 30 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். செய்­யாத வேலைக்கு பொய்­யான விலைப்­பட்டி­ய­லைத் தயா­ரித்­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் அவர்கள் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.

மேலும், சிவில் டெக் நிறு­வ­னத்­தி­டம் $9.7 மில்­லி­யன் மதிப்­புள்ள தொகையை மோசடி செய்ய சதித்­திட்­டம் தீட்­டி­யது உள்­ளிட்ட குற்றங்­க­ளுக்­காக இந்த ஐவ­ரும் தலா மூன்று குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

இவர்­க­ளு­டன் சிவில் டெக் நிறு­வ­னத்­தின் துணை ஒப்­பந்­த­தாரர்­கள் ஏழு பேர் மீதும் குற்­றங்­கள் சுமத்­தப்­பட்­டன.

அவர்­களில் ஒரு­வர் ஹுவாங் ஸிகுவோ, 47. இவர் ஹுவா ரோங் என்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரா­வர்.

ஹுவாங், இந்­தச் மோச­டிச் செயலில் சிவில் டெக் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிந்த ஓங் காக் பெங்குக்கு உதவி செய்து, செய்­யாத வேலைக்­காக $1.4 மில்­லி­யன் தொகை பெறு­வ­தற்கு போலி­யான தர­வு­க­ளைத் அளித்­தது உள்­ளிட்ட 20 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார். இந்த 20 குற்­றச்­சாட்­டு­களில் 19 குற்­றச்­சாட்­டு­களில் ஓங் சம்­பந்­தப்­பட்­டுள்­ளார் என லஞ்ச ஊழல் பிரி­வின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

மோச­டிச் சம்­ப­வங்­களில் குற்­றச்­சாட்­டுப்­பட்­டுள்ள எஞ்­சிய ஆறு துணை ஒப்­பந்­த­தா­ரர்­கள் வெவ்­வேறு சிறு நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­நர்­க­ளா­வர்.

அவர்­கள் ஹவு­சிங் ரீபி­ளேஸ்­மெண்ட் நிறு­வ­னத்­தின் டான் ஹெங் லீ, 34, ருய் ஃபெங் என்­ஜி­னி­ய­ரிங் & கன்ஸ்ட்­ரக்­‌ஷன் நிறு­வனத்­தின் சியோங் யாம் செங், 45, ஹோங் ஹாய் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் நிறு­வ­னத்­தின் ஸுவாங் ஹி, 48, அலை­யன்ஸ் ரிசோர்­சஸ் நிறு­வ­னத்­தின் வோங் முன் கின், டோவெல் என்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் ஆங் லை சூன், 57, டா ஹோ ஃபவுண்­டே­ஷன் நிறு­வ­னத்­தின் யூ யின்ஜீ, 59 ஆகி­யோ­ரா­வர்.

இவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தலா 10 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்கு­கின்­ற­னர். குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள 12 பேரில் 11 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள். கான் மட்­டும் மலே­சிய நாட்­ட­வ­ரா­வார்.

இந்த வழக்­கின் விசா­ரணை அடுத்த மாதத்­திற்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்றச்­சாட்டு ஒவ்­வொன்­றுக்­கும் பத்­தாண்­டு­கள் வரை சிறைத் தண்ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­படலாம்.