பூஸ்டர் திட்டத்தில் ஆர்வம்

பூஸ்டர் திட்டத்தில் ஆர்வம்

2 mins read
f7262298-ecc6-4c27-8e78-bfb87fe94c2f
டெக் கீ சமூக மன்றத்தில் சிலர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய அளவில் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று தொடங்கியது.

100க்கும் அதிகமானோர் நேற்று டெக் கீ சமூக மன்றத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

வரும் நாட்­களில் 140,000க்கும் அதி­க­மான மூத்­தோ­ருக்கு ஃபைசர் அல்­லது மொடர்னா பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள அழைப்பு விடுக்­கப்­படும் எனச் சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

தஞ்சோங் பகார் சமூக மன்றம், இதர சில தடுப்பூசி நிலையங்கள், பொது மருந்தகங்கள், 'பிஹெச்­பி­சிஸ்' எனப்­படும் பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­கள் ஆகியவற்றிலும் மூத்த குடிமக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

அதி­க­மா­னோ­ரி­டையே கொவிட்-19 கிருமி பர­வி­வ­ரு­வ­தன் தொடர்­பில் சிலர் கவலை தெரி­வித்­த­னர். அத­னால் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது நல்­லது என்று அவர்­கள் கருத்­து­ரைத்­த­னர்.

சிலர் ஆண்­டு­தோ­றும் சளிக்­காய்ச்­ச­லுக்கு எதி­ரான தடுப்­பூ­சி போட்­டுக்­கொள்­ப­வர்­கள். அதே­போல்­தான் கொவிட்-19 பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வதும் என்று அவர்கள் ககூறினர்.

என்டியுசி இன்கம்மின் முன்னாள் தலைமை நிர்வாகியான டான் கின் லியேன் டெக் கீ சமூக மன்றத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 100க்கும் அதிகமானோரில் ஒருவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் மோசமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் ஐந்திலிருந்து எட்டு மடங்கு அதிகம் என்பதை அவர் சுட்டினார்.

ராஃபிள்ஸ் மருத்­து­வக் குழு­மம் நடத்­தும் 14 தடுப்­பூசி நிலை­யங்­களில் டெக் கீ சமூக மன்­ற­மும் ஒன்று. தஞ்­சோங் பகார் சமூக மன்­றத்­தில் நேற்று மட்­டும் 200க்கும் அதி­க­மா­னோ­ருக்கு பூஸ்­டர் தடுப்­பூசி போட திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­ததாகக் குழு­மம் ஸ்ட்­ரெய்­டஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தது.

தங்­க­ளின் தடுப்­பூசி நிலை­யங்­கள் மூத்­தோ­ருக்கு உகந்­த­வை­யாக அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அது கூறி­யது. சக்­கர நாற்­கா­லி­கள், கைகளை அமர்த்­தும் அம்­சம் கொண்ட நாற்­கா­லி­கள் உள்­ளிட்­டவை மூத்­தோ­ருக்காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வசதி­களில் சில.

சிலர் இதற்­கென நேரத்­தைத் தேர்ந்­தெ­டுக்­கா­மல் டெக் கீ சமூக மன்­றம் உட்­பட தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்கு நேர­டி­யா­கவே சென்று ஊசி­யைப் போட்­டுக்­கொண்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், தான் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் படத்தை ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றம் செய்­தி­ருந்­தா­ர்.