போலி தடுப்பூசி ஆவணம் தயாரித்ததாகக் குற்றச்சாட்டு

போலி தடுப்பூசி ஆவணம் தயாரித்ததாகக் குற்றச்சாட்டு

1 mins read
f64d3d53-85ab-4499-8008-8f23c842f2f9
-

தான் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக நிரூ­பிக்க மருத்­து­வ­ரின் ஆவ­ணத்தை மாற்­றி­ய­மைத்­த­தாக சீனா­வைச் சேர்ந்த ஷாங் ஷாவ்­பெங் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. உண­வ­கத்­தில் உண­வ­ருந்­து­வ­தற்­காக அவர் அவ்­வாறு செய்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ராக ஷாங் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக ஆவ­ணம் காண்­பித்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. அவர் உண்­மை­யி­லேயே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டாரா என்­பது குறித்து நீதி­மன்ற ஆவ­ணங்­களில் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. உண­வ­கத்­திற்­குள் செல்ல போலித் தடுப்­பூசி ஆவ­ணத்தை தயா­ரித்­த­தாக ஒரு­வர் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­ப­டு­வது இதுவே முதல்­முறை எனக் கரு­தப்­ப­டு­கிறது.

மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட ஆவ­ணத்­தின் மின்­னி­லக்க வடி­வத்­தைக் கொண்டு இம்­மா­தம் ஒன்­றாம் தேதி­யன்று ஆர்ச்­சர்ட் சாலை­யில் உள்ள ஓர் உண­வ­கத்­திற்­குள் ஷாங் நுழைய முயன்­ற­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

ஆவ­ணம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்டிருக்­கக்­கூ­டும் எனச் சந்­தேகித்த உண­வக ஊழி­யர்­கள், அங்­கி­ருந்து கிளம்­பு­மாறு அவ­ரி­டம் கூறி­யிருக்கின்­ற­னர். அதற்கு இணங்கி ஷாங் அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதற்­குப் பிறகு சம்­ப­வம் குறித்து போலி­சா­ரி­டம் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­பந்­தப்­பட்ட உண­வ­கத்­தின் பெயர் உள்­ளிட்ட விவ­ரங்­கள் வெளி­யிடப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையே, இவ்­வாண்­டின் முதல் எட்டு மாதங்­களில் பாது­காப்பு தூர இடை­வெ­ளித் தூதர்­க­ளுக்­கும் அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்­கும் எதி­ராக மொத்­தம் 92 புகார்­கள் வந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவற்­றில் 22 புகார்­கள் ஆதா­ரம் கொண்­டவை என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபு நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு எழுத்­து­பூர்­வ­மா­கப் பதி­ல­ளித்­தார்.

அவற்­றில் 20 புகார்­கள் தூதர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் இரண்டு அமலாக்க அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரா­கப் பதி­வா­னவை.