'மூத்தோர் பேசிப் பழகுவதை குறைக்கவும்'

'மூத்தோர் பேசிப் பழகுவதை குறைக்கவும்'

2 mins read
b13db2ac-f670-4b87-8e42-28b4f40c4b2a
-

வெளியே சென்று பிற­ரு­டன் பேசிப் பழ­கு­வதை அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்­கு முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறு ஒருங்­கிணைந்த பரா­ம­ரிப்பு அமைப்பு, 60 வய­தைத் தாண்­டிய மூத்த குடி­மக்கள், அவர்­க­ளு­டன் வசிப்­போர் ஆகி­யோ­ரைக் கேட்­டுக்­கொண்­டுள்ளது.

நேற்று முன்­தின நில­வரப்­படி ஒரு நாளைக்­குப் புதி­தாக கொவிட்-19 கிரு­மித்தொற்று ஏற்­பட்டோரின் எண்­ணிக்கை கடந்த ஓராண்­டில் காணப்­ப­டாத அளவில் பதி­வா­ன­தைத் தொடர்ந்து அமைப்பு இவ்­வாறு அறி­வுரை வழங்­கி­யது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் மூத்த குடி­மக்­கள் மோச­மாக நோய்­வாய்ப்­பட வாய்ப்பு உள்­ளது என்று அமைப்பு அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது. முடிந்­த­வரை வீட்­டில் இருக்­கு­மா­றும் கூட்­ட­மாக இருக்­கும் இடங்­க­ளுக்­குச் செல்­வதைத் தவிர்­க்கு­மா­றும் அது மூத்­தோ­ரைக் கேட்­டுக்­கொண்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மூத்­தோரை விரை­வில் அதைப் போட்­டுக்­கொள்­ளு­மா­றும் அமைப்பு வேண்­டி­யது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளாதோருக்குக் கிரு­மித்­தொற்றால் மோச­மாக நோய்­வாய்ப்­படும் வாய்ப்­பு­கள் ஆறு மடங்கு அதி­கம் என்று அமைப்பு எச்­ச­ரித்­தது. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் நேரத்தை இணை­யம்­வழி தேர்ந்­தெடுக்க மூத்­தோர் தலை­முறை அலு­வ­ல­கத்­தின் தூதர்­கள் மூத்த குடிமக்களுக்கு உத­வு­வர்.

அதோடு, எப்­பொ­ழுது வேண்டு­மா­னா­லும் 'பிஹெச்­பி­சிஸ்' எனப்­படும் பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­கள், பொது மருந்­த­கங்­கள், கொவிட்-19 தடுப்­பூசி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குச் சென்­றும் மூத்­தோர் தடுப்­பூசி போட்டுக்­கொள்ளலாம்.

நட­மாட சிர­மப்­படும் மூத்­த­வ­ரைத் தடுப்­பூசி நிலை­யத்திற்கு அழைத்­துச் செல்ல மூத்­தோர் தலை­முறை அலு­வ­ல­கம் ஒரு­வரை நிய­மிக்­கும்.

வீட்­டில் இருந்­த­படி தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள எண்­ணும் மூத்­தோ­ருக்கு உதவ ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்பு சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­களு­டன் இணைந்து செயல்­படும், மூத்­தோ­ரில் சிலர் வீட்­டில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தகு­தி­பெ­று­வர்.

சரி­யாக முகக் கவ­சத்தை அணி­வது, பேசும்­போது முகக் கவ­சத்தை கீழே இறக்­கு­வது போன்ற செயல்­களின் மூலம் சுத்­தத்­தைக் கடைப்­பி­டிக்­கு­மா­றும் அமைப்பு மூத்த குடி­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது. முகக் கவ­சங்­களை அடிக்­கடி மாற்­ற­வேண்­டும் அல்­லது அவற்­றைச் சுத்­தம் செய்­ய­வேண்­டும் என்று அது வலி­யு­றுத்­தி­யது. மூத்தோர் அடிக்­கடி தங்­க­ளின் கைக­ளைக் கழுவவேண்டும் என்றும் முடிந்­த­வரை தங்­க­ளின் முகங்­களைத் தொடா­மல் இருக்­க­வேண்­டும் என்­றும் அது சொன்­னது.

மேலும், மூத்தோர் வெளி­யில் பிற­ரு­டன் பேசிப் பழ­கு­வ­தைக் குறைத்­துக்­கொள்ள வகை­செய்ய அவர்களுக்கு அத்­தி­யாவசியப் பொருட்­களை வாங்க குடும்­பத்­தார் உதவி செய்­ய­லாம் என்­றும் அமைப்பு குறிப்­பிட்­டது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி புதி­தாக 837 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. அவர்­களில் 77 பேர் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ள், ஐவர் வெளி­நா­டு­க­ளி­லிருந்து வந்­த­வர்­கள்.