கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று தனது கடையில் வேலை சார்ந்த ஒன்றுகூடல் நடவடிக்கையை மேற்கொண்டதால் 'ஆப்பிள்' நிறுவனத்திற்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் ஒருவரின் வேலை கடைசி நாளைக் கொண்டாட ஊழியர்கள் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடையில் ஒன்றுகூடியதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.
அந்நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் ஒன்றுகூடியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) விதிமுறைகள் 2020க்குக்கீழ் செயல்பட அனுமதி உள்ள நிறுவனங்கள், ஊழியர்களை ஒன்றுகூட வைக்கும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.