புதிய அவதாரம் எடுக்கும் துணைப்பாட வகுப்பு ஆசிரியர்

புதிய அவதாரம் எடுக்கும் துணைப்பாட வகுப்பு ஆசிரியர்

1 mins read
971a6824-addf-4b9e-b721-8a2dc5bb1013
-

23 ஆண்­டு­க­ளா­கத் தனி­யார் துணைப்­பாட வகுப்பு ஆசி­ரி­ய­ராக வேலை செய்­த­வர் ஷர்­மிளா கோபால­ கி­ருஷ்­ணன் (படம்). அந்த கால­கட்­டத்­தில் அவர் கற்­றல் சவால்­களை எதிர்­நோக்­கும் பல சிறு­வர்­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றார்.

கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கவும் முழுக் கவ­னத்­து­டன் பாடத்­தில் ஈடு­பட சிர­மப்­படும் மாண­வர்­கள் வகுப்­பில் அழு­வ­தைக் கவ­னித்­தி­ருக்­கி­றார். அத்­த­கைய மாண­வர்­களின் பார்­வை­யி­லி­ருந்து அவர்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­க­ளைப் புரிந்­து­கொள்ள முயற்சி செய்­த­தா­கத் திரு­வாட்டி ஷர்­மிளா கூறி­னார். மாண­வர்­க­ளுக்கு என்ன பிரச்­சினை இருந்­தா­லும் உத­விக்­க­ரம் நீட்­டத் தான் இருப்­ப­தாக அவர்­க­ளுக்கு ஆறு­தல் வழங்­கி­யி­ருக்­கி­றார் இவர்.

இத­னை­யொட்டி சிறப்­புத் தேவை உள்ள மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுத் தரும் பயிற்­சியை மேற்­கொள்­ள திரு­வாட்டி ஷர்­மிளா முடிவு செய்­தார். சிங்­கப்­பூர் 'டிஸ்­லெக்­சியா' கற்­றல் குறை­பாடு சங்­கத்­தின் சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்­கான கல்வி வழங்­கும் பயிற்­று­விப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக அவர் அவ­த­ரித்­தார்.

திரு­வாட்டி ஷர்­மிளா உட்­பட 67 பேர் சங்­கத்­தின் பயிற்­சித் திட்­டத்தை மேற்­கொண்டு சிறப்­புத் தேவை பயிற்­று­விப்­பா­ளர்­க­ளாக உரு­வெ­டுத்­த­னர்.

11 ஆண்­டு­க­ளாக இயங்­கி­வ­ரும் இச்­சங்­கம், இது­வரை 577 சிறப்­புத் தேவை பயிற்­று­விப்­பா­ளர் பட்­ட­தா­ரி­களை உரு­வாக்­கி­யுள்­ளது. முது­நிலை, பட்­ட­யக் கல்­விப் பாடங்­களை சங்­கம் வழங்­கு­கிறது.

'போஸ்ட்­கி­ரா­ஜு­வெட்' பட்­டக் கல்­விக்­குப் பிறகு மேற்­கொள்­ளும் சான்றிதழ் கல்வியை மேற்­கொண்ட திரு­வாட்டி ஷர்­மிளா, தான் மெற்­கொண்ட பாடங்­கள் வாயி­லா­க­வும் சக மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்ட திறன்­களை எண்ணி மன­நி­றைவு அடை­வ­தா­கச் சொன்­னார்.