ஜூன் மாதத்தில் 92,100 வேலை வாய்ப்புகள்

ஜூன் மாதத்தில் 92,100 வேலை வாய்ப்புகள்

2 mins read
1947fe05-668e-4f27-b599-e7f09115a922
-

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளா­லும் பல துறை­களில் ஊழி­யர்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் கடந்த ஜூன் மாதம் சிங்­கப்­பூ­ரில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு வேலை வாய்ப்­பு­ எண்­ணிக்கை ஏற்­றம் கண்­டது.

ஜூன் மாதத்­தில் 92,100 வேலை வாய்ப்­பு­கள் இருந்­த­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கடந்த ஜூன் மாதம் வேலை­யில்­லா­மல் இருந்த ஒவ்­வொரு 100 பேருக்­கும் 163 வேலை வாய்ப்­பு­கள் இருந்­தன. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துக்­குப் பிறகு கடந்த ஜூன் மாதத்­தில் முதல்­மு­றை­யாக வேலை­யில்­லா­தோர் விகி­தத்­தை­விட வேலை வாய்ப்­பு விகி­தம் அதி­க­மாக இருந்­தது.

தற்­போது நடப்­பில் உள்ள எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளால் கட்­டு­

மா­னத்­து­றை­யி­லும் உற்­பத்­தித்­து­றை­யி­லும் ஊழி­யர் பற்­றாக்­கு­றையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நிதி மற்­றும் காப்­பு­று­திச் சேவை­கள், நிபு­ணத்­து­வச் சேவை­கள், தக­வல் மற்­றும் தொடர்­புத் துறை, ஆகி­ய­வற்­றிலும் ஊழி­யர்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது," என்று மனி­த­வள அமைச்சு கூறி­யது.

இதற்­கி­டையே, இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் சிங்­கப்­பூ­ரில் வேலை­யின்மை விகி­தம் தொடர்ந்து குறைந்து வந்­த­தாக அமைச்சு தெரி­வித்­தது.

ஒட்­டு­மொத்த அடிப்­ப­டை­யில், பரு­வத்­துக்கு ஏற்ப மாற்­றி­ய­மைக்­கப்­படும் வேலை­யின்மை விதி­கம் கடந்த ஜூன் மாதத்­தில் தொடர்ந்து குறைந்து 2.7 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

பரு­வத்­துக்கு ஏற்ப மாற்­றி­ய­மைக்­கப்­படும் நீண்­ட­கால வேலை­யின்மை விதி­க­மும் கடந்த ஜூன் மாதத்­தில் 0.9 விழுக்­கா­டா­கக் குறைந்­தது. கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லும் இவ்­வாண்டு மார்ச் மாதத்­தி­லும் அது 1.1 விழுக்­

கா­டாக இருந்­தது.

"புதிய வேலைச் சூழ­லுக்கு ஏற்­ற­வாறு தங்­களை மாற்­றிக்­கொண்டு புதிய வாய்ப்­பு­களை வர்த்­த­கங்­களும் ஊழி­யர்­களும் பயன்­ப­டுத்­திக்­கொள்­வதை ஊழியர் சந்­தை­யில் ஏற்­பட்­டுள்ள இந்த முன்­னேற்­றம் பிர­தி­ப­லிக்­கிறது," என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார்.

வர்த்­த­கங்­க­ளுக்­கும் ஊழி­யர்­

க­ளுக்­கும் தொடர்ந்து ஆத­ரவு அளிக்க முத்­த­ரப்­புப் பங்­கா­ளி

­க­ளு­டன் அர­சாங்­கம் இணைந்து செயல்­படும் என்­றார் அவர்.