இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு

இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு

1 mins read
607d1bed-e7f1-4774-a837-d54b010fe208
-

இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­ட­தால் சிங்­கப்­பூ­ரில் தொழி­லா­ளர் சந்தை பாதிக்­கப்­பட்­டது.

முதல் காலாண்­டைக் காட்­டி­லும் இரண்­டாம் காலாண்­டில் ஆட்­

கு­றைப்பு எண்­ணிக்கை சற்று அதி­க­ரித்­தது. மேலும் பல ஊழி­யர்­க­ளுக்­குக் குறை­வான வேலை நாட்­கள் வழங்­கப்­பட்­டன. சிலர் தற்­கா­லி­க­மாக வேலை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­னர்.

இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் 2,340க்கும் மேற்­பட்­டோர் தற்­கா­லி­க­மாக வேலை­யி­

லி­ருந்து நீக்­கப்­பட்­ட­னர்.

முதல் காலாண்­டில் தற்­கா­லி­க­மா­கப் பணி­நீக்­கம் செய்­யப்­பட்ட 2,270 பேரை­விட இது அதி­கம் என்று மனி­த­வள அமைச்சு வெளி­யிட்­டுள்ள ஊழியர் சந்தை அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

ஆட்­கு­றைப்பு விகி­தம் அதி­க­ரித்­துள்­ள­போ­தி­லும் நெருக்­க­டி­

நி­லைக்கு முந்­திய விகி­தத்­துக்கு அது உட்­பட்டு இருப்­ப­தாக மனி­த­வள அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் அவ்­பெக் காம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.